சுவாசம்

9.2K 194 419
                                    


"தன் இரண்டு காதுகளையும் இறுக மூடிக்கொண்டு தூக்கத்திலிருந்து எழுந்தான் ஜெய் நந்தன்.. ஒஹ் சீட் காலங்காத்தால எவன் பாட்டை போட்டுட்டு கொடுமை பண்றது இடியட்" என கூறிக்கொண்டே எழுந்து வந்தவன் கண்களை மூடியவாறே தன் அறைக்கு பக்கத்தில் இருக்கும் அறைக்குள் நுழைந்தான்... " டேய் ஏன் டா இப்படி பண்ணிட்டு இருக்க.. நிம்மதியா தூங்க விட மாட்டாயா என கேட்டவளின் குரல் அந்த இசையில் கரைந்து தான் போனது....( ஜெய் நந்தன் நம் நாயகனின் தம்பி..)

சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே..

வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு உங்கள் வளைவுகள் அழகு
ஹோ மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே அது நங்கையின் குணமே
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே...

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

"ஏய்ய்ய டேய்... என கத்தியவன்  பாட்டை ஆஃப் செய்து விட்டு அவனின் அருகில் ருத்ர மூர்த்தியாக நிற்க அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவனிடம் புன்னகையுடன் பேசினான் அவன்..

"இன்னைக்கு நான் அவளை பார்க்க போறேன் டா ஜெய்..! ரொம்ப வருஷம் ஆனா மாதிரி இருக்குல்ல டா... என் மேலே இன்னும் கோவமா தான்  இருப்பல்ல டா...!!  ஆனா கண்டிப்பா என்னை வெறுத்து இருக்க மாட்டான்னு நினைக்கிறேன்...
நான் போயி அவகிட்ட எல்லா உண்மையும்  சொன்னா நம்புவால டா.. நம்புவா கண்டிப்பா  இந்த மாமான விட்டு இருக்க மாட்டா... சரி டா நான் போயிட்டு வரேன்.. அம்மாக்கிட்ட சொல்லிடு டா அவங்க மருமக  வந்த அப்பறமாவது எங்கிட்ட பேச சொல்லு... அப்பறம் ஹிட்லர் கேட்டா ஏதாவது அள்ளிவிடு சரியா.." அறையின் வாசல் வரை சென்றவன் மீண்டும் திரும்பி

"டேய் நான் போனா அவ என்னை மனிச்சு ஏத்துக்குவா தானே..!!
என்னை பார்க்கவே மாட்டேன்னு சொன்னா என்ன டா பண்றது...
இந்த மூணு வருசமா என் நிழல் இருக்கற பக்கம் கூட வரமா இருக்கா... அப்படி  இன்னும் என் மேல கோபமா இருப்பா.. என எதோ தன் போக்கில் கூறியவனை சிறு வருத்த புன்னகையுடன் கட்டியணைத்து கொண்டவன் "கண்டிப்பா அண்ணி உன்னை புரிஞ்சுக்குவாங்க டா நீ  பயப்படாம போ...."என ஆறுதல் கூறினாலும் இவனிற்கு சிறு கலக்கம் இருக்க தான் செய்தது...!!

  புயலே சுவாசமாய் (( முடிவுற்றது ))Where stories live. Discover now