சுவாசம் 12

1.5K 115 104
                                    

காலையிலிருந்து அமைதியின் மற்றோரு வடிவமாய் அமர்ந்திருந்த துகிராவைப் பார்த்த ஹேமாவிற்கு ஏதோ போல் இருக்க.. அவளிடம் கேட்க நினைத்தவள் துகிராவிடம் சென்றாள்

"அக்கா" என அழைக்க.. பதில் எதுவும் இல்லாமல் போக..சற்று சத்தத்துடன் "அக்கா" என்று ஹேமா அழைக்க.

நினைவு வந்தவளாய் "சொல்லுங்க ஹேமா, ஸ்டுடெண்ட் வந்துடங்களா" என்று வினாவ..

"அக்கா இந்த டைம்ல யாரும் வர மாட்டாங்க இரண்டு மணி தான் ஆகுது அக்கா.. நீங்க ஏன் இன்னும் சாப்பிடாம இருக்கீங்க போயி சாப்பிடுங்க" என கூற "இல்லை எனக்கு பசியில்லை நீ சாப்டியா" என துகி கேட்க..

"ஹும்ம் இப்ப தான் அக்கா. நம்ம ஸ்டாப் மேம்பேர்ஸ்க்கூட சாப்பிடேன் க்கா..ஆமா நீங்க ஏன் இன்னைக்கு ரொம்ப சோகமா இருக்கீங்க"என கேட்க..

"நான் எப்பவும் போல தான் இருக்கேன் ஹேமா" என்று துகிரா கூற...

"இல்லைக்கா நீங்க எப்பவும் அமைதியா மட்டும் தான் இருப்பீங்க ..சோகமா இருக்க மாட்டீங்க அமைதிக்கும்,சோகத்துக்கும் டிஃப்ரெண்ட் இருக்கு அக்கா" என்று ஹேமா சொல்ல...

துகியோ பதில் கூறாமல் இருக்க..
"அக்கா என்ன யோசினையா இருக்கீங்க" என ஹேமா கேட்க.

"அது ஒன்னுமில்லை கொஞ்சம் தலைவலி அதான்" என கூறிவிட்டு பின் சீட்டின் மெல் தலையை சாய்த்து கண்களை மூடிக்கொண்டாள்..

இதற்கு மேல் தொல்லை தராமல் வெளியில் வந்தவள்...யாதவ் அமர்ந்து இருப்பதைப் பார்த்து நேராக அவனிடம் சென்றவள்

"என்ன லட்டு இன்னைக்கு சீக்கரமா வந்துட்டீங்க போல அதுவும் இரண்டு மணிக்கே வந்துடிங்க"

"அது ஒன்னுமில்லை தங்கச்சி சும்மாதான்" என கூற.. "டேய்ய்ய்...
இந்த தங்கச்சியை விட மாட்டயா.. நீ" டேய் என்பதை மட்டும் மனதில் கூறிக்கொண்டாள்...

யாதவோ "இல்லை தங்கச்சி உன்னை பாத்ததும் எனக்கு தங்கச்சி பீல் தான் வருது"

"இருக்கும் டி இருக்கும்...இருக்காதப் பின்ன.... உன்கிட்ட ஒன்னு கேட்கலானும் இருந்து மறந்துட்டேன்.... உனக்கு கல்யாணம் ஆயிருச்சா" என ஹேமா கேட்க..

  புயலே சுவாசமாய் (( முடிவுற்றது ))Where stories live. Discover now