சுவாசம் 46

1K 126 100
                                    

பாறையின் மீது விழுந்த நீர் துளிபோல் யாருக்கும் நிற்காமல் காலம் கரைந்தோடியது இன்றுடன் ஐந்து மாதம் முடிந்த நிலையில் புத்தம் புது மலராக பூத்து நின்றாள் நவிரா... வாழ்வின் கசப்பான நினைவுகள் அனைத்தும் மறந்து படிப்பை மட்டும் முதலாக எண்ணி வெற்றி எனும் படி ஏற தொடங்கி மதிப்பு எனும் மாளிகையை அடைய காத்து இருந்தாள்....!!!!!

"மாம்ஸ் சீக்கரம் சீக்கரம் வாங்க வாங்க போலாம் இப்பவே ரொம்ப டைம் ஆச்சு" என அறையின் வாசலிலே நின்று கத்திக் கொண்டு இருந்தாள்.

"அடியே நீ எவ்ளோ கத்தி கத்தி கூப்பிட்டாலும் அவன் என்னன்னு கேட்க மாட்டான் டி. குளிச்சிட்டு இருக்கான் வெளில வந்ததும் இழுத்துட்டு போலாம். நீ போயி பசங்கள பாரு என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னு தெரியல..."என துகி சொல்லவும்

"சீக்கரம் கூட்டிட்டு வா டி நான் போயி பசங்க ரெண்டு பேரையும் பாத்துட்டு வந்தறேன்" என கூறியவள் அங்கிருந்து குழந்தைகளின் அறைக்கு செல்ல அங்கு சரணோ எதுவும் அணியாமல் அப்படியே நின்று கொண்டிருந்தான்..

"டேய் டேய் நீ என்ன டா இப்படி நின்னுட்டு இருக்க.. சரண்யா எங்க டா" என நவிரா அவளை கண்களால் தேடியவாறே கேட்க

" அவ பாட்டிகிட்ட இருக்கா.. என சோகமாக சொல்ல" "சரி நீ இங்க வா" என தன் குழந்தையை அருகில் அழைக்க

"சித்தும்மா சித்தும்மா...நீ கண்ணை மூடிகோ....நான் பையன் நீ என்னை பாக்கதா போ போ.." என சரண் வெட்கத்தில் கூற

"இப்ப தான் ஞாபகம் வந்துச்சா உனக்கு, இங்க வா நான் உனக்கு ட்ரெஸ் போட்டு விடறேன்" என கூறியவள் அவன் உயரத்திற்கு அமர்ந்து குட்டி குர்த்தவயும் பேண்டையும் அணிவித்துவிட்டதும் அவனை தூக்கிக்கொண்டு யாதவ் அறையை நோக்கி நடந்தாள் நவிரா...

குளித்து முடித்து வெளியில் வந்ததும் தன் மனையாளைப் பார்க்க அவளோ எதையோ தீவிரமாக தேடிக்கொண்டு இருந்தாள்.."என்ன டி தேடிட்டு இருக்க! நான் வேணா ஹெல்ப் பண்ணவா" என கேட்டவனிடம்...

  புயலே சுவாசமாய் (( முடிவுற்றது ))Where stories live. Discover now