❤️பாகம் 1❤️

11.9K 104 4
                                    

உனக்கு மட்டும் உயிராவேன்..

அப்பப்பா! என்ன வெயில் ..இப்படி என்றும் இல்லாத் திருநாளாய் இன்னிக்கு வெயில் மண்டையை பொளக்குதே!மனதிற்குள் உச்சி வெயிலை சபித்தவாறே அஞ்சலியின் மென் கரங்கள் மாடியில் காய்ந்து கொண்டிருந்த துணிகளை அவசரமாக உருவின.

உதட்டோரம் மெலிதாய் பொடித்திருந்த வியர்வையைத் துளிகளை துடைத்தாவாறே அஞ்சலி துணி சுமையை தன் அறைக்கு அள்ளிச்சென்றாள்.

அங்கே அன்றலர்ந்த தாமரை பூவாய்,  அவளுடைய குட்டிச்செல்லம் மாயா  உலகை மறந்த நிலையில் உறங்கிக் கொண்டிருந்தாள். 

மெல்ல அவள் அருகில் சென்றவள்,  அந்த பதுமை உறங்கும் அழகை தாய்மை நிறைந்த கண்களால் இரசித்துக் கொண்டிருந்தாள்.

அப்படியே அப்பாவின் ஜாடை.அவனுடைய சுருள் கேசம்,அதே கூர் நாசி,சிரிக்கும் பெரிய கண்கள்.இவளை ஒத்தாற் போல் அமைந்தது என்னவோ மாயாவின்  கீழ் உதடு மச்சமும் சுழிந்து நிற்கும்  கன்னக்குழியும் தான்.

கைகள் தன்னிச்சையாகவே மாயாவின்  சுருள் கேசத்தை மெதுவாக தடவிடன.
சின்னவள் தாயின்  ஸ்பரிசம் உணர்ந்து மெலிதாய் சிணுங்கினாள்.

குழந்தையின் உறக்கம் கலைக்க மனமின்றி, அஞ்சலி  படுக்கையில் இருந்த துணிகளை மடிக்கத் தொடங்கினாள்.

தூரத்தில் எங்கோ விமானம் பறக்கும் ஓசை சன்னமாய் கேட்டு மறைந்தது.
எப்பொழுதும் மெலிதாய் கசியும்  இசையை கூட மாயாவிற்காக நிறுத்தி விட்டிருந்தாள்.நிசப்தம் மட்டுமே எங்கும் நிலவிய வேளையில் கண்கள் ஏனோ அறையின் கோடியில் ஆளுயர தங்க ப்ரேமிட்ட புகைப்படத்தில் பதிந்தது.

அதில் அவளும் அவனும்.திருமணக் கோலத்தில்.அஞ்சலி யுகேந்திரன் ராஜ்.காட்சிகள் மெல்ல இரண்டு வருடங்களுக்கு முன்பு விரிந்தன. புயல்  போல தன் வாழ்வில் வந்து  வசந்தங்களையும் அள்ளி கொடுத்தவனின் நினைவில் அஞ்சலி  இதழ்களில் புன்னகை குடிக்கொண்டது. மெல்ல மெல்ல தன்னை  மையம் கொண்டவனின் நினைவுகளும் அவளுள் எழுந்தன. 

ஏதோ ஒரு சனிக்கிழமை பொழுதில் அவளுடைய அருமை அத்தை மைதிலி போனில் அஞ்சலியுடன் போராடிக்கொண்டிருந்தாள்.

'அஞ்சும்மா நல்ல பொண்ணுதானே? அத்தையை பார்க்க வரமாட்டியா கண்ணு?"

'போ அத்தை உன்னோடு ஒரே வம்பா போச்சு..
எதையாச்சும் சமைக்கிறேன் பேர்வழினு என்ன கொன்னுர்வே."

"நான் மாட்டேன்ப்பா", அஞ்சலி பதிலுக்கு மல்லு கட்டினாள்.

அப்பாவோடு பிறந்த இந்த கடைகுட்டி அத்தையிடம் அவளுக்கு பாசமும் உரிமையும் அதிகம்.

"நான் வரமாட்டேன்னா மாட்டேந்தான்"

"நான் நல்ல சாப்பாடு சாப்டு தூங்கனும் மைதிலி  அத்தே.நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணலாம்,சரியா "

"ஏண்டீ..நீ என்னிக்குத்தான் தூங்காம இருந்த?உன் மாமா அவுட்ஸ்டேசன் முடிச்சிட்டு இன்னிகுத்தான் வந்தாரு."

"வந்ததும் என் வாலு பொண்ணு வந்தாளானு மனுசன் என்ன தொளச்சிட்டு இருக்காரு..சும்மா வருவியா.பெரிசா அலுத்துக்கிறா"

"அய்யோ என் அருமை அத்தே!மாமா வந்திட்டாரா?இத மொதல்லே சொல்லிருந்தா இந்நேரம் அஞ்சும்மா அங்க ஆஜர் ஆயிர்ப்பாளே,நீ ரொம்ம மோசம் அத்த" 

கைத்தொலைப்பேசியை அணைத்து விட்டு கைக்கு கிடைத்த ஜீன்சுக்குள் கச்சிதமாய் உடலை நுழைத்துக்கொண்டு, மேலுக்கு ஒரு டாப்சை அணிந்து ரெடியானாள்.

மோகன் மாமாவிற்கு அஞ்சு என்றால் உயிர்.குழந்தை முதல் அவர்களிடம் வளர்ந்ததால் அவருடைய செல்ல பிள்ளையாகி
போனவள் அஞ்சலி. 

அளவான உயரத்தில் அடர் நீண்ட கூந்தலில் அஞ்சலி பார்க்க அம்சமாய் இருப்பாள்.மஞ்சள் தேகமும் கன்னக்குழியும்,

போனசாய் கீழ் உதட்டில் ஒட்டிக் கொண்ட மச்சமும் ,எளிமையான அலங்காரத்தில் அழகாகவே இருப்பாள்.அவளுடைய விவா காரில்  பத்தே நிமிடத்தில்  மாமா வீட்டை நெருங்கி விட்டாள்.

❤️உனக்கு மட்டும் உயிராவேன்❤️completed Where stories live. Discover now