❤️பாகம் 18❤️

4.1K 93 2
                                    

பாகம் 18

திறந்தவன் யுகேந்திரன்தான் .
கணவன் வருகை உணர்த்ததும்,சட்டென திரையிட்டிருந்த கண்ணீரைத் துடைத்தவள்,சாரியை சரி  செய்தாள்.

இதழோடு ஒட்டிய புன்னகையும் மனதோடு அப்பிய வலியுமாய் அவனை வரவேற்றாள்.

"அஞ்சலி என்னாச்சு உனக்கு?ஏன் இங்க உக்காந்திருக்க?கண்கள் 
சிவந்திருக்கே..அழுந்தியா?"

பரிவாய் ஒலித்தது அவன் குரல்.மனதிற்குள்,"பாவி,அங்க அவள கொஞ்சிட்டு இங்க வந்து  நல்ல பிள்ளை மாதிரி சீன் போடறியா?"ஊமையாய் சீறியது அஞ்சலியின் மனம்.

''கொஞ்சம் தலைவலி மச்சி.   ட்ராவல் பண்ணிட்டு வந்தோம்ல,அதான்"

ஆதரவாய் அவள் தலை வருடியவன் கண்களில் கள்ளத்தனம் கொஞ்சமும்  தெரியவில்லையே.

"இப்போ பெட்டர் தானே மச்சி ,வா உன்னை ஒரு ஸ்பெசல் கெஸ்ட்டுக்கு அறிமுகப்படுத்துறேன்.பார்த்தால்  அசந்திடுவே ''

"ஓ ரீட்டாவை அறிமுகப்படுத்த நினைகிறாயா?வீட்டுக்கு வாடி  மகனே உனக்கு அங்க இருக்கு கச்சேரி"விஷமமாய் மனதிற்குள் கறுவிக் கொண்டாள் அஞ்சலி.

முகம் கழுவி தலை முடியை கோதி  சரி செய்தவள் எதுவும்  நடவாதது போல  அவனை பின் தொடர்ந்தாள்.

வெளியே வந்தவன் கரம் தன்னிச்சையாய் அஞ்சலியின் தோளை உரிமையாய்  சுற்றிக் கொண்டது.

அதிர்ந்து போன அஞ்சலி அவன் கையை விலக்க முயன்று  முடியாமல் அவன் முகத்தைப்பார்த்து அடிக்குரலில் சீறினாள்.

"யுகேன் என்ன இது புதுப்பழக்கம்,நாம என்ன லவ் பெர்ட்ஸ் ஆ?மொதல்ல கைய எடுங்க.எல்லோரும் பாக்கறாங்க''அவன் கண்களில் குறும்பு மின்ன 

''யாரு பார்த்தா எனக்கு என்ன செல்லம்?இது புது பழக்கம் இல்லை..இனிமே இதுதான் உனக்கு நிரந்தரம்"

அழகாய் கண்களை சிமிட்டினான்.கை  அணைப்பை  மேலும்  இறுக்கினான்.

"யார் பாக்கறதுக்கு இவன் இப்படி வழியிறான்.அவள்  முன்னுக்கு  எதுக்கு  இந்த ட்ராமா "அஞ்சலி  மைண்ட்  வாய்ஸ்  ஒத்து  ஊத,

❤️உனக்கு மட்டும் உயிராவேன்❤️completed Where stories live. Discover now