❤️பாகம் 10❤️

4.2K 80 1
                                    

பாகம் 10

அவன்  மட்டும்  அவளுக்கு சளைத்தவனா என்ன? அவள்  பின்னாலே ஓடி வந்து ஒட்டிக் கொண்டான். மேஜர்  திவாகர் அவனை முறைத்து பார்க்க, 

"கூல்  அங்கிள், அஞ்சலி  சீரியஸா எடுத்துக்க  மாட்டா. இப்போ போய் உள்ளே  பாருங்க, ஆண்டி சுட்ட பஜ்ஜிய  காலி பண்ணிட்டுயிருப்பா" யுகேன் அப்படி  சொல்லவும், நம்பமாட்டாமல் அவரும் கிச்சனை  எட்டிப்பார்க்க, அஞ்சலி கிச்சன் மேடையில் அமர்ந்து, பஜ்ஜியை  விழுங்கிக்கொண்டிருந்தாள். 

"அடிப்பாவி  மவளே, இதுக்கா  அந்த ஆர்ப்பாட்டம் பண்ணின? " அங்கிள்  அசந்து போக, யுகேன் எதுவும் நடவாதது போல   அஞ்சலியுடன் சேர்ந்துக் கொள்ள, அங்கிள் நிலைதான்  பரிதாபம் ஆயிற்று.டீ டைம் முடிந்து வீட்டுக்கு வந்ததும்  தான் அஞ்சலி தன் நிஜ ரூபத்தை காட்டினாள். 

"மவனே  உனக்கு தெரியும்  தானே, தவளை னா எனக்கு  எவ்ளோ பயம்? அத கொண்டு  வந்து போடறல? உன்னை இன்னிக்கு  விடறாதா இல்லடி மச்சி!" வீட்டை சுத்தி  சுத்தி அவனை துரத்தி ரெண்டு அடி அடிச்ச  அப்புறம்தான் அஞ்சலி அமைதியானாள். 

 இப்படி  அவளை சீண்டி திரிவதில் அவனுக்கு  அவ்வளவு குஷி.
அவளும் தான் அவன் இரசனைகளுக்கு  ஈடு தருவது போல எதாவது செய்வாள். 

திடிரென்று ஜாக்கிங் போக அழைப்பாள்,ரிங்க்லட் அருவியில் கால் நனைக்க போகலாம் என்பாள்.
அவளுடைய மாறுப்பட்ட இரசனைகள் யுகேனுக்குள் இரசாயன மாற்றங்களை தந்தது.

மனதளவில் அவளை உயிருக்குள் வைத்து உருகவும் செய்தான்.அவள் மனம் அறியா நிலையில் அஞ்சலியின் மாசற்ற அன்பு அவன் ஆண்மையை அவ்வபொழுது சீண்டவே செய்தது.

அவளை அவன் சுதந்திரப் பறவைப் போல் உலவ விட்டான்.வெளியில் சென்றால் மட்டும் sms இல்லனா கால் செய்ய சொல்வான்.

காலமும் நேரமும் யாருக்கு காத்திருக்கும்?காதலிக்கும் கணவனும் இவள் கடைக்கண் பார்வைக்கு காத்து நின்றான்.

❤️உனக்கு மட்டும் உயிராவேன்❤️completed Where stories live. Discover now