❤️பாகம் 12❤️

4.1K 82 1
                                    

பாகம்  12

ஒரு நாள் யுகேனைப் பார்க்க அவன் வீட்டிற்கு வந்த குணா உடன் அவனுடைய செல்லப் பிராணி பொமேரியன்  நாய்க்குட்டியை கூட்டி வந்திருந்தான்.

அஞ்சலிக்கு சிறு வயது முதல் நாய் என்றால் பயம்.வீட்டிலுள்ளவர்களையும் களீபரம் செய்து விடுவாள்.

யுகேனுக்கும் இது
தெ யவில்லை.
மொசு மொசுவென்றிருந்த அந்த குட்டி வீட்டை சுற்றி ஓடி விளையாடிக்கொண்டிருந்தது. தோட்டத்திலிருந்த அஞ்சலியும் குணா வந்ததை கவனிக்கவும் இல்லை.

அந்த நாய்க்குட்டி மெல்ல நழுவி தோட்டத்திற்கு ஓடி விட்டது.நேராக பூச்செடிகளில் மனம் இலயித்திருந்த அஞ்சலியின் பாதங்களை நக்கியது.அவ்வளவுதான்.
அஞ்சலிக்கு பயம் வந்துவிட்டது.

யுகேன் யுகேன் என்று கத்திக்கொண்டே ஹாலுக்கு ஓடினாள்.அவள்  தன்னோடு  விளையாடுவதாய் எண்ணி   அவள் பின்னே அந்த குட்டியும் ஓடியது.குணா இருந்ததையும் கவனியாது வாசலில் நின்றிருந்த யுகேனை கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

அப்படியே அவன் முதுகில் ஒண்டியவள் நாயை அவனுக்கு சுட்டிக் காட்டினாள். பயத்தில் அவள் உடல் நடுங்குவது அவனும் உணர்ந்தான்.பூக்குவியல் ஒன்று சட்டென மோதியது போன்று ஓர் உணர்வு யுகேனுள் தோன்றி மறைந்தது.

நிமிடத்தில் சுதாகரித்தவன்,
அஞ்சலியின் பதட்ட நிலை உணர்ந்து அவளை அணைத்துக் கொண்டான்.
அவளும் கோபம் மறந்து அவன் மேல் ஒட்டிக் கொண்டாள்.

இடையில்  குணா  செமறவே, யுகேன்  தன்னிலை உணர்ந்து,

"குணா,டாமிய தூக்கிக்க,அஞ்சலி பயப்படறா பாரு''கட்டளையாய் வெளிப்பட்டது யுகேனின் குரல்.

அதற்குள் டாமீயை தூக்கிக்கொண்ட குணா,கத்தி சிரித்தான்.

"ஹாஹாஹ¡ஹா..நாய்க்குட்டிக்கு பயப்படலாமா அஞ்சு?அது உன்னை ஒண்ணும் செய்யாதே..கடிக்க கூட தெரியாதேம்மா.பாவம் உங்கூட வெளயாட வந்திருக்கும்,நீ என்னனா இப்படி பயப்படற"
சிரிப்பிலே அஞ்சலியை கலாய்த்தான்.

❤️உனக்கு மட்டும் உயிராவேன்❤️completed Where stories live. Discover now