❤️பாகம் 4❤️

5K 83 2
                                    

பாகம் 4

அவனுடன் ஒன்றிய இவளுடைய இரசனைகள் அவர்கள் உறவுக்கு வலு சேர்த்தது.அவளை கிண்டல் செய்வது யுகேனுக்கு மிகவும் பிடிக்கும்.செல்லமாய் ஏஞ்சல், மச்சி  என்பான்.

"அஞ்சலி அஞ்சலினு உன்ன கூப்பிட்டா அஞ்சலி பாப்பா படம் ஞாபகம் வருதுப்பா..அது கியூட் பாப்பா,உனக்கு பொருந்தாதேம்மா" என அப்பாவியாய் ஜோக் அடிப்பான்.கோவத்தில் அவள் முகச்சிவப்பை கண்டு இன்னும் கலாய்ப்பான்.

பதிலுக்கு அஞ்சலியும் சண்டை கோழியாவாள்.
விடுமுறையில் அஞ்சலி வீட்டிற்கு வருவது யுகேனுக்கு இயல்பாகிப் போனது.
எளிதில் பெண்களிடம் வழியும் இரகம் இல்லை அவன்.

அவன் முதல் முதல் பார்த்து மயங்கிய அவன் முன்னால் காதலி ரீத்தாவைப்  போலத்தான் மற்ற பெண்களும்  இருக்கக்கூடும் என முழுதும் நம்பினான். அது பொய் என்பதை அஞ்சலியின் நட்பு அவனுக்கு உணர்த்தியது.

மற்ற பெண்களை போல் அல்லாது,அவளுடைய இயல்பு வாழ்க்கை அவனுக்கு வித்யாசமாய் தோன்றியது.

ஷொப்பிங் என்றால் முகம் சுழிப்பவள் ஜங்கள் ட்ரெக்கிங் என்றால் முகம் மலர்வாள்.கடல் மணலில் கிளிஞ்சல் பொறுக்குவதும் ,
அடை மழையில் குடை இன்றி நடப்பதும்,யுகேனுக்கு இவள் குழந்தை போல் தெரிவாள். 

தெளிவான பேச்சு,
வித்தியாசமான அவளுடைய இரசனைகள் மெல்ல மெல்ல இவனையும் தொற்றிக் கொண்டது.புதியது புராதனம் எது கேட்டாலும் அவளிடம் பதில்கள் இருக்கும். 

அன்று அப்படிதான்,மழையில் நனைகிறேன் பேர்வழி என்று யுகேந்திரன் காய்ச்சலை வரவழைத்துக் கொண்டான்.

'என்ன மச்சி  நீ,மழைல ஆடலாமா?இப்ப காய்ச்சல் வந்து அவதிதானே",
செல்லமாய் கடிந்தவளை, 

'வெல் நீயும் தான் மழைல ஆடுர உனக்கு மட்டும் சீக் வரலயே,அதான் ஐயாவும் ட்ரை பண்ணேன்,இப்படி ஆச்சு'அசடு வழிந்தான்.

மேலும் திட்ட மனம் இல்லாது,'எனக்கு மழைக்கும் கணக்கு வேறப்பா,நீங்க அப்படி இல்ல மச்சி, சிட்டில   கண்ணாடி மாளிகைல இருக்கறவங்களுக்கு இந்த  மழை ஒத்துக்காதாம், சோ ரிஸ்க்  எடுக்காதே கண்ணா'.

❤️உனக்கு மட்டும் உயிராவேன்❤️completed Où les histoires vivent. Découvrez maintenant