❤️பாகம் 3❤️

8.1K 91 8
                                    

பாகம் 3

இடையில் நடந்த சம்பவங்களில் அந்த நெடியவனை அஞ்சலி  மறந்தும் போனாள்.மெல்லிய உணர்வுகளை கொண்ட பெண் அஞ்சலி.

இயற்கையை இரசிக்கும் அவளுடைய கண்கள்.மழை தூரலில் குடை மறந்து நடக்கும் அவளுடைய கால்கள்.அலை உரசும் கடல் அருகே நின்று அஸ்தமிக்கும் சூரியனை வழி அனுப்பி விட்டே வீட்டுக்கு வருவாள்.

விரும்பி ஏற்ற ஓட்டல் இந்திரியர் டிசைனிங் தொழிலும் புண்பட்ட மனத்திற்கு இதம் சேர்த்தது.

திருமணம் முடிந்து பெரியவள் மயூரி மலாக்காவிலும் ,சின்னவன் மிதுன் சிங்கப்பூரிலும் வசிக்க,

அஞ்சலி மட்டும் அன்னை தந்தை அரவணைப்பில் வாழ்ந்து கொண்டிருந்தாள்.
அன்று ஞாயிற்றுக்கிழமை.

வார விடுமுறையாதலால் அஞ்சலி நிதானமாய் எழுந்து காலை கடன்களை முடித்து விட்டு காபி அருந்திக் கொண்டிருந்தாள்.

அம்மாவுக்கு சுட்டு போட்டாலும் வராத காபி பக்குவம் மகளுக்கு வர பிரசாதமாய் அமைந்தது அவள் அம்மாவுக்கு எளிதாய் போய்விட்டது.இவள் கலந்து தரும் காபியே அவருக்கு சொர்கமாய் தோன்றும்.

சமையலில் கைத்தேர்ந்தவர் என்றாலும் காபி விஷயத்தில் சொதப்பல்தான். காபியில் மனம் இலயித்திருந்தவளை சிணுங்கிய கைத்
தொலைப்பேசி அழைத்தது.
ஸ்கிரீனில் புது நம்பர் தெரியவும் புருவத்தை
சுருக்கினாள்.

'ஹெலோ வணக்கம்,அஞ்சலி ஹியர்'.

எதிர் முனையில் சீரான மூச்சுடன் ஒரு ஆண் குரல் இணைந்தது.

'ஹெலோ நான் யுகேந்திரன்'
கம்பீரமாய் ஆனால் அதிராத ஆளுமை குரல் அவள் காதில் பாய்ந்தது.

'எந்த யுகேன்..ப்ச்சு அந்த வளர்ந்து கெட்டவனா?அவனுக்கு எப்படி நம்ப நம்பர் கெடைச்சது? அஞ்சலி மைண்ட் வாய்ஸ் தந்தியடிக்க,

அதை உணர்ந்தவன் போல,

'மிஸ் அஞ்சலி உங்க நம்பர உங்க மாமாதான் தந்தார்."

'நான் உங்களை மீட் பண்ணியாகனும்'.

மீண்டும் அஞ்சலி மைண்ட் வாய்ஸ் தந்தியடிக்க ஆரம்பித்தது.

❤️உனக்கு மட்டும் உயிராவேன்❤️completed Onde histórias criam vida. Descubra agora