❤️பாகம் 14❤️

3.9K 88 1
                                    

பாகம்  14

கண்களை உறுத்தாத உதா மற்றும் க்ரீம்  வண்ணத்தில் அவன் அறை அமைந்திருந்தது.அது அஞ்சலியின் விருப்ப வர்ணங்கள் கூட.

மனதிற்குள் குதூகலித்தவள்,அறையின் கோடியில் ஜன்னலோரம் இருந்த வெள்ளை நிற பியானோவைக் கண்டாள்.வெளிக் காற்றுக்கு ஜன்னலைத் திறந்தாள். 

மலை வாசத்துடன் மெல்லிய ஈரக்காற்று அவள் நாசி தடவி சென்றது.ஜன்னலோரம் அழகாய் விரிந்திருந்த  தானாராத்தா மலைக்காட்சி மனதை கொள்ளை செய்தது.ஆசையாய் அந்த பியானோவைத் தடவிப் பார்த்தாள்.

அவள் வெண்டை விரல் பட்டு அந்தக் கருவி நாதம் எழுப்பியது.இவனுக்குள் இவ்வளவு திறமையா?அஞ்சலி வியந்துதான் போனாள்.

அவளை மேலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது,சின்ன சின்ன  கண்ணாடிப்பேழைகளில்  இருந்த பொருட்கள்.அஞ்சலி பொறுக்கி கொடுத்திருந்த  கடல் சிற்பிகள், கிளிஞ்சல்கள்  சின்ன கண்ணாடி பெட்டிக்குள் வைத்திருந்தான்.

அதன் மூடி மேல் அஞ்சலி மச்சி  என்ற பெயரும் திகதியும் எழுதி வைத்திருந்தான்.

அதைப் பற்றி அஞ்சலிக்கு நினைவு கூட இல்லை.உடன் கையடக்க காமிராவும் இவளைப் பார்த்து சிரித்தது.

அதன் பக்கத்தில் சட்டமிடாத கான்வாஸ் சுருள்களும் கிடைத்தன.அதில் ஒன்றை உருவிப் பார்த்தாள்.

அதில் மழைச்சாரலில் கண் மூடிய நிலையில் வெள்ளைச்சாரியில் ஒயிலாய் நின்றிருந்தது அஞ்சலியேதான்.அவள் கண்களை அவளாளே நம்ப முடியவில்லை.

அவ்வளவு தத்ரூபமாய் அவளை  வரைந்திருந்தான்.
படத்தின் கீழே காதலுடன் யுகேந்திரன் ராஜ் என்று அவன் முழுப்பெயரும் தமிழில் எழுதியிருந்தான்.

மெல்ல தன் விரல்களை அந்த படத்தின் மேல் பரவ விட்டாள்.அன்று மழையில் அவன் அண்மையில் சுகித்திருந்தது நினைவில்  எழுந்தது.அவன் காதலும் அவளுக்குப் புரிந்தது.

அன்று காதல் மேலிட அணைத்ததை காமத்தின் வெளிப்பாடு என்று தவறாய் நினைத்து தன்னையும் வறுத்தி அவனையும் வறுத்தியது நெஞ்சை வண்டைப் போல் குடைந்தது.

❤️உனக்கு மட்டும் உயிராவேன்❤️completed Where stories live. Discover now