❤️பாகம் 15❤️

4K 85 2
                                    

பாகம்  15

'ஹெய் ஏஞ்சல் டூ யு மிஸ் மீ' பனித் தென்றலாய் அவள் செவியில் மோதியது அவன் குரல்.கன்னக்குழி சுழிய ஆம் என்பது போல் தலை அசைத்தாள்.மெழுகுவர்த்தி ஒளியில் மழையில் நனைந்ததின் அடையாளமாய் அவன் சுருள் கேசத்தில் இடம் பிடித்திருந்த மழை துளிகளை கைகளினால் தட்டி விட்டாள்.

"இந்த சாங் உங்களுக்கு பிடிக்குமா?''

"ம்ம்..மழைக்கு இப்படி காண்டல்ஸ் கொழுத்தி வெச்சுட்டு இந்த தியூன் வாசிக்க பிடிக்கும்.

"இன்னிக்கு  அதே மாதிரி  நிலையில் இருந்ததா அய்யாவோட அறை,அதான் கைகள் தானாய் வாசிக்க ஆரம்பிச்சிருச்சு அஞ்சு"அவள் கைகளை பிடித்தவாறே பேசினான்.

''ஐ லைக் இட் யுகேன்,ரொம்பவும் அழகாய் வாசிக்கிறிங்க'' அஞ்சலி  உணர்ந்து  கூறினாள்.

"தாங்கஸ் அஞ்சு,ஒரு ஆர்வத்துல கத்துக்கிட்டது,
நேரம் இருந்தா கண்டிப்பா வாசிப்பேன்"

"பட்,இங்க நான் வந்து நீங்க வாசிச்சதே இல்லையே,ஏன்?''அஞ்சலி  கேட்க,

"வாசிப்பேன் அஞ்சலி,மிட் நைட்ல தூக்கம் வராட்டி வாசிப்பேன்,உனக்கு தொந்தரவா இருக்க கூடாதுனு கதவை சாத்தி வெச்சிடுவேன்"

''ப்ச்சு..எனக்கு பியானே இசை கிரேசி யுகேன்..நல்லா அனுபவிச்சு கேப்பேனே,
இனிமே வாசிச்சா கதவை திறந்து வைங்க,நான் கேட்டுக்கிட்டே தூங்கிடுவேன்"

சற்றே கண் மூடி சிரித்தவன்,

"ஹெய்,எவ்வளவு நேரம் நான் இப்படி நனஞ்ச கோழியாய் நிக்கறது?காய்ச்சல் வந்தா நீ பாக்க கூட மாட்டே,கிட்ட வந்தாலே சிணுங்குவே,"

"அந்த டவல்ல எடு..நான் போய் குளிச்சிட்டு வரேன்''எப்பொழுதும் போல் அவளை சீண்ட ஆரம்பித்தான்.

செல்லமாய் அவனை முறைத்தவள் அந்த நீல நிற டவலை அவன் மேல் வீசினாள்.

"மவனே வாய் நீளுதே..
சாப்பிட கீழே வாங்க அங்க வெச்சிக்கிறேன்''

''இடுப்பில கூட தூக்கி வெச்சுக்கோ..யார் வேணா சொன்னா? அப்படியே இந்த மழையில் நனையும் மஞ்சள் நிலா காட்டி சோறு கூட ஊட்டி விடலாம்,தப்பே இல்லை''

❤️உனக்கு மட்டும் உயிராவேன்❤️completed Where stories live. Discover now