❤️பாகம் 8❤️

4.2K 80 3
                                    

பாகம் 8

அன்று அவளுக்கு ஜூரம் கண்டுவிட்டது.அவளுடைய ஆசை மழைக்கூட மோசம் செய்து விட்டது.கடும் வெயிலுக்கு பின் வரும் முதல் மழை உடலுக்கு நல்லதன்று என அஞ்சலி அறிந்திருந்தாலும்,மறு நாள் அனுவிற்கு தாலி பிரித்து கோர்க்கும் வைபவம் இருந்தது;

அதற்கு அவள் உடுத்த வேண்டிய கல்யாண பட்டுப்புடவையை நிழலில் உலர்த்த வேண்டி மாடியில் காய வைத்து விட்டு அனு பார்லருக்கு சென்று விட்டாள்.

மழை நீர் பட்டு புடவையை வீணாகிவிடும் என்ற பயத்தில் அஞ்சலி மாடிக்கு விரைந்தாள். நல்ல வேளை மழை தூறல் என்றாலும் அனுவின் புடவை மேல் லேசாகவே பட்டிருந்தது.
ஆனால் அதனால் அஞ்சலிக்கு காய்ச்சல் கண்டுவிட்டது.

இரவில் கணவனுடன் பேசியவள் தனக்கு காய்ச்சல் என்பதைக்கூட மறைத்து விட்டாள்.அவசரத்திற்கு ஒரு பரசிட்டமாலை வாயில் போட்டுக் கொண்டு நாளைய விசேசத்தின் வேலைகளில் மூழ்கிப்போனாள்.

மறுநாள் யுகேனுக்கு அவசர மீட்டிங்க் என்பதால் வர இயலாது என்பதை இரவிலேயே அவளிடம் சொல்லியுருந்தான்.காலை வேளையில் மங்கள வாத்தியங்கள் சிஸ்டத்தில் இசைக்க தாலி கோர்க்கும் வைபவம் நிறைவேறியது.

இடையில் உடல்வேதனையும் பொருட்படுத்தாது கையில் குங்கும சிமிழுடன் அஞ்சலி நின்றிருந்தாள்.
அனு குங்குமம் எடுத்து தாலிச்சரடில் ஒற்ற கை வைக்கும் நேரம் அஞ்சலியை ஒரு பிஞ்சு இடித்துவிட்டு ஓடியது.

நிலைத்தடுமாறியவளின் கையிலிருந்த குங்கும சிமிழும் கீழே விழுந்தது.
அபசகுனமாய் நிகழ்ந்ததாய் எண்ணிய அனு ஆத்திரத்தில் அஞ்சலியை அறைந்தும் விட்டாள்.

பொறி கலங்கினாற் போல இருந்த அஞ்சலி எதன் மேலோ மோதி நிமிர்ந்தாள்.
அங்கே ஆத்திரத்தில் சிங்கம் போல் நின்றவன் யுகேந்திரனே.

'அனூ...'ஆத்திரத்தில் யுகேன் குரல் ஓங்கி ஒலித்தது

'இதோட நிறுத்திக்கோ!'

"அண்ணா..வந்து வந்து..'யுகேனின் கோவம் அனுவிற்கு பயத்தை உண்டு பண்ணியது.

❤️உனக்கு மட்டும் உயிராவேன்❤️completed Where stories live. Discover now