❤️பாகம் 19❤️

4.4K 85 2
                                    

பாகம்  19

தான் கேட்டது கனவா இல்லை நினைவா ? என்பது போல் அஞ்சலி யுகேனைப் பார்த்தாள்.

''யுகேன்..வந்து வந்து.."வார்த்தைகள் தொண்டைக்குழியோடு நின்று விட்டது அவளுக்கு .

"உன்னை அப்புறம் வீட்டுக்கு  போய்  வெச்சுகிறேன் மச்சி'' விஷமமாய் அஞ்சலியை நோக்கி கூறினான்.

'' வெல், உங்கிட்ட பேச எதுவும் இல்லை ரீ ட்டா,உன்னால நான் அனுபவிச்ச வலிகளும் இரணங்களும் போதுமே."

"காதல் புனிதமான உணர்வு,அத பணம் காசிற்கும்,பகட்டு வாழ்க்கைக்கும் பகடை காயாய் நீ உருட்டியது கூட தெரிஞ்சிக்காம காதலிச்சிருக்கேன்"

"உண்மையா உன்னை காதலிச்சேன்.பட் எல்லாம் பணத்திற்குனு நீ உணர்த்தினது,உன்னை மாதிரி வாழ்க்கையில நான் சந்திச்ச சில விட்டில் பூச்சிகள்,அஞ்சலி மாதிரி  நல்ல பொண்ணுங்க இருக்காங்க என்பதையே மறக்க வெச்சிருச்சு."

"ஆழமான நட்பு,நம்பிக்கை,
அன்புனு அவள் உலகம் அழகானது.அதில் எனக்கும் பங்கு தந்து என்னை சிரிக்க வெச்ச என் தேவதை.கடவுளுக்கு என்மேல  கொஞ்சம்  கருணை  இருந்திருக்கும். என்  வாழ்க்கைல  இப்படியும்  ஒருத்தி  வசந்தமாய்  வந்திருக்காளே "

"அவள் காதல் எனக்கு மட்டும் உரியதுன்னு இன்னிக்கு  தெரிஞ்சிக்கிட்டேன்.
அதுக்கு உனக்குத்தான்  கோடி  நன்றி சொல்லணும்"

"இனிமே யார் வாழ்க்கையிலும் காதல்னு சொல்லி விளையாடிராதே.எனக்கு கிடைச்ச  மாதிரி  தேவதை எல்லோருக்கும் கிடைச்சிடாது" அழுத்தமாய் ஒலித்தது யுகேனின் குரல்.

''கம் டார்லிங்"

அஞ்சலி தோளில் கைப்போட்டவாறு ரீட்டாவை கடந்து நடந்தான்.
நடப்பது எதுவும்  புரியாமல் 
அஞ்சலி மலங்க மலங்க விழித்தாள்.என்ன  நடக்குது  இங்க. நிஜமாவே  தலை வலித்தது அவளுக்கு.

அவர்களை எதிர்க்கொண்ட பூவிழியும் குணாவும் அர்த்தபுஷ்டியில் பார்த்தனர்.

"சாரி  மச்சான்,நான் இன்னிக்கு கிளம்பியாகணும்.
வீக் எண்ட் கேமரன் வந்து சேருடா"

❤️உனக்கு மட்டும் உயிராவேன்❤️completed Where stories live. Discover now