❤️பாகம் 7❤️

4.4K 86 12
                                    

பாகம்  7 

கார் அந்தபிரமாண்ட பங்களாவின் வாசலில் நின்றது.

வரவேற்பறையில் நின்றிருந்த ஆளுயர பிள்ளையார் சிலை அவளை வரவேற்றது.

ஆரத்தி எடுக்க வந்த ஆயாவை யுகேன் அஞ்சலிக்கு அறிமுகப்படுத்தினான்.

"அஞ்சலி இவங்க என்னை வளர்த்தவங்க,சீதாம்மானு பேரு.என் அப்பா வழி சொந்தம்னு வெச்சுக்கோயேன் .

"அம்மா அப்பா கூட தொழில் விசயமா அலையறப்ப நான் ,அனு இவங்க கண்காணிப்பில் வளர்ந்தவர்கள்'. பெருமையாய் சீதாம்மாவின் கைப்பற்றி அஞ்சலிக்கு அறிமுகப்படுத்தினான்.

தாய்மை நிறைந்த கண்களுடன் அவளை வரவேற்றவரை அஞ்சலிக்கு பிடித்துப்போயிற்று.

'ராஜா இப்படி ஷாக் நியூஸ் குடுப்பேனு நான் எதிர்ப்பார்கலடா,பொண்ணு உனக்கு ஏத்த மாதிரி இருக்காளே.அதுவும் அந்த கன்னக்குழி செம்மடா'.
இன்னாள் பிள்ளைகள் பேசுவது  போல் பேசும் அவரை ஆச்சர்யமாய் அஞ்சலி பார்த்தாள்.

'அது ஒன்னுமில்ல அஞ்சு, இந்த உதய் பயல்  இப்படி பேச இவங்களுக்கு கத்துக்கொடுத்துட்டான்.

"சீதாம்மா சமையல் ரொம்பா ருசியா இருக்கும்,இந்த சாப்பாட்டு ராமன்  நல்ல முழுங்கிட்டு "ஆண்டி இன்னிக்கு சமையல் செம்ம யா இருக்குனு டயலாக் விடுவான்.அது இப்படி அம்மாவையும் ஒட்டிக்கொண்டது.

சலுகையாய் அவர் தோளில் சாய்ந்து கொண்டே அஞ்சலியின் பார்வைக்கு அர்த்தம் கூறினான்.   

"வா,அம்மாவையும்,பாட்டியையும் பார்த்துட்டு வரலாம்'.
அஞ்சலியின் கைப்பற்றி கமலத்தின் அறைக்கு அழைத்துச் சென்றான்.

 கொஞ்சம் தடித்த சரீரம் வெண்பட்டில்,கம்பீரத் தோற்றதில் கமலம் அவளின் பார்வைக்கு கிடைத்தார்.

'அம்மா எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க'
அஞ்சலியுடன் யுகேன் கமலத்தின் கால்களில் விழுந்தான்.

'ம் ம் நல்லாயிருங்க நல்லாயிருங்கனு' சொல்லி விட்டு விருட்டென எழுந்து பால்கனிக்கு சென்று விட்டார்.

❤️உனக்கு மட்டும் உயிராவேன்❤️completed Where stories live. Discover now