❤️பாகம் 11❤️

4K 82 3
                                    

பாகம் 11

மழை விடாமல் தூறிக்கொண்டிருந்தது.
அதை இரசிக்கும் மன நிலையில் அவள் இல்லையே.மணி பத்தாகியும் வெளி வராத அஞ்சலியை தேடிக் கொண்டு யுகேன் அவள் அறைக்கு வந்தான்.நல்ல வேளை நேற்றுப் போல் அவள் அறைக்கதவை சாத்தி வைத்திருக்கவில்லை.

விடுமுறை நாள் என்பதால் யுகேனும் வீட்டில் இருந்தான்.
நேற்றைய சம்பவம் நிகழாதிருந்திருந்தால் லீவுக்கு இருவரும் வீட்டை இரண்டுபடுத்தியிருப்பார்கள்.

சிஸ்டத்தில் எதாவது பாடலைக் கேட்டுக் கொண்டு இருவரும் வீட்டு வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள்.

கிண்டலும்கேலியுமாய் யுகேன்  அவளை சிரிக்க வைப்பான்.தவளையைக் கண்டால் அலறிக் கொண்டு ஓடும் அஞ்சலியை வேண்டும்மென்றே அதை பிடித்துக்காட்டி பயமுறுத்துவான்.

அவளும் அவனுக்கு சளைத்தவள் இல்லையே.
அவசரத்தில் அவன் தேடும் பொருட்களை ஒளித்து வைத்து விளையாடுவாள்.

மாலையில் இருவரும் மலைப்பாதையில் நடக்க, இல்லை அருகில் இருக்கும் தேனீர் விடுதியில் சுடச்சுட தேனீர் குடித்து விட்டு இயற்கையை இரசிப்பார்கள்.
இயந்திரமாய் இருந்தவனை இயல்பாய் மாற்றியவளை அவன் உயிர் நுரைக்க நேசித்தான். 

அவளின் குழந்தைத்தனம்,
கள்ளமில்லா சிரிப்பும் யுகேனுக்கு அவள் ஏஞ்சலே தான்.ஆனால் இன்று நடந்தது வேறு அல்லவா?

அஞ்சலி அருகில் அமர்ந்தவன் ,

"என்ன மன்னிச்சிரும்மா.
நா அப்படி நடந்திருக்ககூடாது..எது என்னை மிருகம் ஆக்கிச்சுனு தெரியல" இனிமே இப்படி நடக்காம நான் பார்த்துகிறேன்",
வருத்தம் அவன் குரலில் வெளிப்பட்டது.

அவள் அசையாதிருக்கவே.
மெல்ல அவளைத் தொட்டுப் பார்த்தான்.உடல் அனலாய்கொதித்தது.

எதையும் உணரும் நிலையில் அவள் இல்லை.
விரைந்து அவள் தலை துவட்டியவன்,மருத்துவரை செல்லில் அழைத்தான்.

''கேமரன் மலை குளிருக்கு மழையில் யாராச்சும் ஆடுவார்களா மிஸ்டர் யுகேன்?மருந்து கொடுத்திருக்கேன்..பார்த்து கொள்ளுங்கள்''

❤️உனக்கு மட்டும் உயிராவேன்❤️completed Where stories live. Discover now