❤️பாகம் 20🌹முற்றும் ❤️

6.5K 158 77
                                    

மெத்தென்று அஞ்சலி அவன் மீது மோதினாள்.

"மவனே,விடுங்க என்னை, இப்படியா முரட்டுதனம் காட்டுவது "அவன் கேட்டால் தானே.காலை விச்ராந்தியாய் சோபாவில் நீட்டியவன், அஞ்சலியை அழகாய் மடிமேல் இருத்திக் கொண்டான்.

"இப்போ கேளு செல்லம்.என் கண்ணம்மாவிற்கு என்ன தெரியணும்" அவன் கைகள் அவள் கூந்தலை மெல்ல வருடின.

உரிமையாய் அவன் நெஞ்சில் சாய்ந்தவள்,

"ரீட்டா என்னமோ சொன்னாளே,நீங்க வேற மாதிரி இல்ல  நடந்துகிறீங்க,எதும் புரியலை எனக்கு" சிறுப்பிள்ளைப் போல் கேட்டாள்.

"அடிப்பாவி அந்த மழைக் கால அணைப்பு உனக்கு புரிஞ்சியிருந்திருந்தா இன்னிக்கு இவ்வளவு நடந்திருக்காதே. எல்லாம் என் நேரம்" எனக் கூறி தன் அணைப்பை இறுக்கியவன்,
நடந்ததை நினைவு கூர்ந்தான்.

விழாவில்,கண்ணனை தாய்ப் போல் ஏந்திக்கொண்டு வலைய வந்த அஞ்சலியை அணு அணுவாய் இரசித்து இரசித்து தன் செல்லில் சிறை செய்தவன்,

இடையில் அவளைக் காணாது திகைத்தான்.
அப்பொழுது அங்கு வந்த பூவிழி அஞ்சலி ரீட்டாவுடன் பேசியதையும்,அஞ்சலி முகம் வாடியதையும்,ரீட்டா எதையோ தன் ஐப்பேட்டில் காட்டி காட்டிப் பேசியதையும் கூறினாள்.

ரீட்டா எதோ சதி செய்வதை உணர்ந்தவன்,அவளை தேடிச்சென்றான்.குணாவும் அப்பொழுது அங்கு வந்து விட்டான்.

இருவரும் மிரட்டியதில் முதலில் மசியாத ரீட்டா,யுகேன் போலிசுக்கு செல்வேன் என்றதும் பயந்து
அடங்கினாள்.

நடந்ததை சொல்லி அதன் ஆதாரத்தையும் காட்டினாள்.
அதைப்பார்த்த யுகேனுக்கு கோவம் தலைக்கேறியது.
அவளை அறைய கை ஓங்கியவனை குணாதான் தடுத்து நிறுத்தினான்.

"அஞ்சலியை போய் பாரு யுகேன்,இவள அப்புறம் பார்த்துக்கலாம்" என குணா கூறவும்தான் ,

யுகேந்திரன்  அஞ்சலியை  தேடி  சென்றது. அங்கு
அறையில் அஞ்சலி தாலிச்சரடை பற்றி அழுதுக்  கொண்டிருந்ததில்  அவனுக்கு சகலமும்  விளங்கிற்று.

आप प्रकाशित भागों के अंत तक पहुँच चुके हैं।

⏰ पिछला अद्यतन: Apr 19, 2020 ⏰

नए भागों की सूचना पाने के लिए इस कहानी को अपनी लाइब्रेरी में जोड़ें!

❤️உனக்கு மட்டும் உயிராவேன்❤️completed जहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें