பெண் என்பவள்

296 52 6
                                    

Office - 17

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பாண்டியன் ஸ்டோர்ஸ்யை பரிசோதனை செய்ய அங்கு காலாவதியான பொருட்களும் தடை செய்யப்பட்ட பொருட்களும் இருக்க கடையை பூட்டி சீல் வைத்தனர்.

வங்கியில் பாண்டியன் ஜாமின் கையெழுத்து போட்ட இருவர் அந்த பணத்தை கட்டாமல் தலைமறைவாக

மேற்கண்ட இரண்டு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டார் பாண்டியன்.

பாண்டியனின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது.

தொலைக்காட்சியிலும் செய்தித்தாளிலும் பாண்டியன் பெயர் அவதூராக பேசப்பட்டது.

கைது செய்யப்பட்ட பாண்டியன் மன உலைச்சளுக்கு ஆளானதால் உடல்நிலை பாதிக்கப்பட்டார் ஜெயிலில்.

அங்கிருந்து மருத்துவமணை அழைத்து செல்லப்பட்டார்.

தன் மனைவி பிள்ளைகளை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கும் போது அவர் உயிர் பிரிந்தது.

அப்பா என பிள்ளைகள் கதறி அழுதனர்.

பாண்டியனின் கண்கள் லெட்சுமியிடன் ஏதோ கூறி விட்டு தான் சென்றது.

லெட்சுமி கண்ணில் இருந்து கண்ணீர் வரவில்லை. தன் கணவனின் அவபெயரை துடைக்க வேண்டும் என்ற நெருப்பு கனல் தான் வந்தது.

பாண்டியனுக்கு அனைத்து இறுதி காரியங்களும் நிறைவேற்றப்பட்டது.

லெட்சுமி வக்கீல் மூலம் நடந்ததை விசாரணை செய்ய

நடந்த அனைத்திலும் சம்மந்த பட்டிருப்பது செல்வம் என தெரிய வந்தது.

கடையில் காலாவதியான பொருட்களை வைத்தது.

பாண்டியன் ஜாமீன் போட்ட நபர்கள் செல்வதின் ஆட்கள் என உண்மை வெளி வந்தது.

லெட்சுமி செல்வத்தை சந்திக்க சென்றார்.

செல்வம்: வாங்க Mrs. பாண்டியன்

லெட்சுமி: ஏன் இப்படி பண்ண. 16 வருஷத்துக்கு முன்னாடியே எங்கல பழி வாங்கிட்டல. இப்ப என்ன.

Office (Stopped)Where stories live. Discover now