2.

1.2K 30 0
                                    

யார் கண் பட்டதோ  கமலியின் வேண்டுதலில் மண் விழுந்தது.
தன் அண்ணன் வாங்கி கொடுத்த போனை ஆர்வமாய் பார்த்து கொண்டிருந்தாள் அறிவழகி.

"அழகிம்மா! என்ன போனை அப்படி பார்த்துட்டு இருக்க?" என்று சிரித்தபடி தன் தங்கையின்  அருகில் அமர்ந்தான்  கண்ணன்.

"அண்ணா! இந்த ஃபோன்  ரொம்ப  சூஃப்பரா இருக்கு அண்ணா." என்று சிரித்தாள் அழகி.

"உனக்கு பிடிச்சிருக்கா?" என்று தங்கையின் தலையை கோதியவன் கேட்டான்.

"எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குண்ணா" என்று சிரித்தாள் அழகி.

"அது சரி. இவ்ளோ நாள் இந்த போனை வாங்கி தராம இப்போ ஏன் வாங்கி கொடுத்திருக்கேன். தெரியுமா?" என்றான் கண்ணன்.

"எதுக்குன்னா?" என்றாள் அழகி .
"இப்போ நீ காலேஜ்  போக ஆரம்பிசிட்ட. அதாவது  வீட்டை விட்டு கொஞ்சம் தூரம் டிராவல் பண்ற. காலேஜ்ல லேட் ஆகிடுச்சு. இல்ல ஸ்பெஷல் கிளாஸ். இல்ல பஸ் லேட் ஆச்சுன்னா உடனே எதுவா இருந்தாலும் வீட்ல இருக்கவங்களுக்கோ இல்ல எனக்கோ  நீ சொல்லணும் இல்லையா அதுக்கு தான்?" என்று  சிரித்தான்.

"சரிண்ணா" என்றாள் அறிவழகி .

"அப்புறம் இன்னொனும் சொல்றேன். அது செய்யாத இதை செய்யாதன்னு இன்னைக்கு வரைக்கும் நம்ம வீட்ல அம்மாவோ அப்பாவோ நானோ உன்கிட்ட எதுவுமே சொன்னதில்லை. அதுக்கு பதிலா  இதெல்லாம் செஞ்சா நல்லதும்மான்னு  சொல்லி தான் வளர்த்திருக்கோம்." என்றான் கண்ணன்.

"ஆமான்னா. எனக்கு தேவையான சுதந்திரத்தை  கரெக்டா  எப்பவுமே கொடுத்திருக்கிங்க." என்று சிரித்தாள் அழகி.

"ஆமா! இப்பவும் அப்படிதான். இந்த போன்ல நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். அதை சரியா புரிஞ்சுகிட்டு உபயோக படுத்தனும். இதுல இருக்க எல்லாமே உண்மையும் கிடையாது  எல்லாம் பொய்யும் கிடையாது." என்றான் கண்ணன்.

என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு)Where stories live. Discover now