35

545 17 0
                                    

"என்ன நடந்துச்சு? ஏன் என் ட்ரெஸ் மாறிருக்கு? இவரும் இப்படி தூங்குறாரு. இவ்ளோ அசதியா தூங்கிற ஆள் இல்லையே?" என்று தனக்குள் கூறியவள் எழுந்து காலை கடன்களை முடித்து குளித்து வந்தாள்.

அவள் வரும் முன்னரே விழித்திருந்த ஷிவா தன் போனில் எதையோ பார்த்து கொண்டிருந்தான்.

அவனிடம் என்ன நடந்ததுன்னு எப்படி கேட்பது என்று தயங்கியபடி கண்ணாடி முன் நிற்க, அவளின் ஒவ்வொரு அசைவையும் ஓரவிழியால் பார்த்து கொண்டிருந்தாலும் எதையும் கவனிக்காதவன் போல் இருந்தான்.

"என்னங்க" என்று அழகி மெதுவாய் கூப்பிடவும் எதுவும் பேசாமல் சட்டென்று எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

'என்னங்கவாம் என்னங்க... மண்ணாங்கட்டி... இப்போ தான் இந்த என்னங்க ஞாபகத்துக்கு வரேனா? நீ நேத்து என்னை படுத்தின பாட்டுக்கு வட்டியும் முதலுமா சேர்த்து தரேன்டி.' என்று திட்டியபடி குளித்து வந்தவன் அவள் ஒருவள் இருக்கிறாள் என்பதை கண்டுகொள்ளாமல் தயாராகி கொண்டிருத்தான்.

"என்னாச்சு ஏன் எதுவும் பேச மாட்டேன்றிங்க?" என்றாள் சிவாவின் அருகில் நின்று.

அவள் பேசுவது கேட்டாலும் முகத்தில் எந்த மாறுதலையும் காட்டாமல் கண்ணாடி முன் நின்று தலை வாரி கொண்டிருந்தான்.

"என் மேல கோபமா?" என்றாள் மெதுவாய்.

அப்பொழுதும் மௌனம்.

"ப்ளீஸ் சாரி. நேத்து என்ன நடந்ததுன்னு எதுவும் ஞாபகம் இல்லை..." என்றாள் விழிகளில் கண்ணீரோடு.

அவளின் கண்ணீரை கண்டு மனம் வலித்தாலும் அதை காட்டாமல், கதவை நோக்கி சென்றான்.

"நான் இவ்ளோ தூரம் கேட்கிறேன் ஏன் எதுவும் சொல்ல மாட்டேன்றிங்க?" அவரின் கரத்தை பற்றி நிறுத்தினாள் கலக்கமாய்.

"அப்படியா மேடம்கு இப்போ என்ன சொல்லணும்?" என்றான் கோபமாய்.

எப்பொழுதும் அன்பாய் பார்த்தவனின் ரௌத்திரம் தாள முடியாமல் அழகி அமைதியாய் நிற்க, "நான் அன்னைக்கே சொன்னேன். நீ இதுல தலையிடாதேன்னு. நான் அவ்ளோ தோத்திரம் சொன்ன பிறகும் அவ்ளோ பயங்கரமான இடத்துக்கு என்கிட்ட கூட சொல்லாம போயிருக்க... ஒஹ் எதுவும் ஆகாதுன்னு நினைப்பு..? நீங்க போனதால என் மனைவி நீங்க தான்னு தெரிஞ்சுருச்சு. அடுத்து என்ன என்னை பழிவாங்கணும்னு காத்திட்டு இருந்தவனுக்கு நாமே முன்னாடி போய் நின்னா என்ன பண்ணுவான்? உன்னை காலம் முழுக்க அவன் ..... உபயோக படுத்த முடிவு பண்ணி அவனோட போதை ஊசியை போட்டு கடத்தினாங்க.

என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு)Where stories live. Discover now