28

533 19 0
                                    

என் விடியலே நீ தானடி! 28

வகுப்பறைக்குள் நுழைந்தனர் இருவரும்.

அமைதியாக தன் இடத்தில் போய் அமர்ந்தவ அழகியின் சிந்தனை அங்கே, தான் கண்ட காட்சியில் இருந்தது.

ஜீவா அருகில் அமர்ந்து கன்னத்தில் கை வைத்து அவளையே பார்த்து கொண்டிருந்தான்.

தன்னை யாரோ உற்று நோக்குவது போல் தெரியவே திரும்பி பார்த்தவள், ஜீவாவை முறைத்தாள்.

"இப்போ எதுக்கு என்னை இப்படி முழுங்குற மாதிரி பார்க்கிற?" என்றாள் முகத்தை சுழித்தபடி எரிச்சலாய்.

"உங்க அழகுல மயங்கி பார்க்கிறேன்னு தப்பா நினைக்காதிங்க... இல்லாத மூளையை யூஸ் செஞ்சு அப்படி ரொம்ப நேரமா என்ன யோசிக்கிறீங்கன்னு தான் பார்த்துட்டு இருக்கேன்." என்றான் மிகவும் கடினப்பட்டு சிரிக்காமல்.

அவனும் ஏதோ சொல்கிறானே என்று கேட்டு கொண்டிருந்தவள் தன்னை  கிண்டல் செய்கிறானென்று உணர்ந்து திரும்பி முறைத்தாள்.

"ஹ்ம்ம்.. உங்களுக்கு கடவுள் அதே மூளையை கொடுத்திருக்காறான்னு தான் நானும் யோசிச்சிட்டு இருக்கேன்." என்றாள் அழகியும் விடாமல்.

"ஏன்? எனக்கென்ன?" என்றான் அவனும் பொய்யாய் முறைத்து.

"பின்ன காலேஜ் படிக்கிற... இன்னும் கூட வளராம சின்ன புள்ள மாதிரி தெரியாதவாங்க கிட்ட போய் சாக்லேட் வாங்கி சாப்பிட போறேன்னு போற? மூளை இல்லையா?" என்று தலையில் அடித்து கொண்டாள்.

அழகி தன்னை உரிமையாய் ஒருமையில் அழைத்ததை குறித்து கொண்டவன்.

"யாரு சொன்னா எனக்கு அங்க யாரையும் தெரியாதுன்னு?" என்று ஜீவா கேட்டவுடன் அதிர்ச்சியில் விழிகள் விரிந்தது அழகிக்கு.

*****

அந்த மகளிர் விடுதிக்கு சற்று தள்ளி வண்டியை நிறுத்திய ஷிவா அங்கு நின்றிருந்த ஏட்டை உற்று கவனித்தான்.

என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு)Where stories live. Discover now