29

522 17 0
                                    

"இந்த நேரத்துல யாரு போன் பண்ணிருப்பா?" என்று யோசித்தவன் எடுப்பதற்குள் நின்று விட்டது.

மீண்டும் அடிக்க, "ஷிவு... டிஸ்டப் பண்ணாத... ஹ்ம்ம்... தூக்கம் வருது..." என்று சிணுங்கியபடி உறங்கினாள் அழகி.

"அய்யோ இவ வேற நேரங்காலம் தெரியாம சிணுங்கி என்னை படுத்துறாளே? ஆமா, யாரை ஷிவுன்னு கூப்பிடறா?" என்று யோசித்தவன் தன்னை தான் அழைக்கிறாள் என்று உணரும் வேளை மீண்டும் கடமை அழைத்தது.

விரைந்து தயாரானாலும் விழிகள் தன்னவளை ஆசையாய் சூழ்ந்திருந்தது.

"எனக்கு செல்ல பேரு வச்சிருக்க, ஆனா கூப்பிட மாட்ட? தூக்கத்துல உன்னையும் அறியாம உளர்ற? உன்னை... என்ன பண்ணலாம்? இப்போ நேரம் இல்லை... இருடி வந்து பேசுக்கிறேன்." என்று புலம்பியபடி கிளம்பினான்.

திடிரென்ற வெளிச்சத்திலும் அவனின் மெலிதான புலம்பலிலும் ஒற்றை விழியை அரைமனதாய் லேசாக திறந்து பார்த்தவள்.

" எதுக்கு இப்போ புலம்புறாரு?"என்று முணுமுணுத்துவிட்டு  முழுதும் விழிக்காமலே மீண்டும் உறங்கி போனாள்.

"என்னது நான் ஏன் புலம்புறேனா? பாவி... என்னை புலம்பவும் வச்சுட்டு ஏன்னு கேள்வியும் கேட்டு தூங்குறா பாரு..." என்று பொறுமியவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து வேகமாய் வெளியேறினான்.

காலை ஆறு மணி அலாரம் காதிற்குள் அடிப்பது போலிருக்க, "ம்ப்ச்..." என்று விழி திறக்காமல் அதை அணைத்தவள்.

"நான் அலாரம் வைக்கவே இல்லையே? நிம்மதியா ஏழு மணி வரைக்கும் தூங்க முடியுதா? நாம தூங்குறதுல பொறாமை பட்டு  யாருடா இந்த வேலையை பார்த்தது? பக்கத்துல தான் தூங்குறாரு... இவ்ளோ சத்தமா அலாரம் அடிக்குது ஆப் பண்ணுதா பாரு தடி மாடு." என்று முணுமுணுத்து கொண்டே விழி திறந்து கணவனை பார்க்கவும், அங்கே அவன் இல்லாமல் வெற்றிடமாக இருக்கவே, தினமும் அவனறியாமல் அவன் முகத்தில் விழிப்பவளுக்கு இன்று ஏமாற்றம் வந்தது.

"இவ்ளோ காலைல எங்க போனாரு?" என்று யோசித்தவள், "அப்போ அவர் தான் அலாரம் வச்சதா? அடப்பாவி எங்க அம்மா வேலையை நல்லா பாக்குறடா நீ." என்று கணவனை திட்டி கொண்டே வேலைகளை முடித்து  கல்லூரிக்கு தயாராக சென்றாள்.

என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு)Where stories live. Discover now