13

699 22 0
                                    

"மா ஏம்மா என் உயிரை எடுக்கிற? " என்று போனில் அம்மாவிடம் பேசிக்கொண்டே சாலையின் எதிர்ப்புறத்தில் பார்வையை சுழலவிட, விழிகள் வேறுப்புறம் திரும்ப மறுத்தது.

அங்கே, அம்மாவின் கரங்கிளில் இருக்க முடியாமல் திமிறிக்கொண்டு அழுதிருந்த குழந்தையை கவனிக்க மனம் பதறியது.

'என்ன ஆச்சு ஏன் குழந்தை இப்படி அழுகுது. எவ்ளோ அழகா இருக்கு. என்ன ஆச்சு தெரியலையே... கிட்ட போய் கேட்போமா?' என்று பைக்கை சற்று தள்ளி ஓரம்கட்டி இறங்க போக...

அந்த குழந்தையின் அருகில் இருந்த பள்ளிக்கூட மாணவிகளின் கூட்டத்திக் சிறு சலசலப்பு... "ஏய் வேணாமடி..." என்று பெண்கள் கூக்குரலிட.. குழந்தையிடம் நெருங்கியிருந்த பெண்ணொருத்தி... சட்டென திரும்பி, இடையில் கரம் வைத்து அவர்களை முறைத்து... "இப்போ என்ன பிரச்சனை உங்களுக்கு...? நான் என்ன பாம்பையா பிடிக்க போறேன்? இந்த கத்து கத்துறீங்க?  பாப்பாவை தானே சமாதானம்  செய்ய போறேன். வாய மூடுங்கடி..." என்று விழிகளை உருட்டி ரெட்டை பின்னல் அசைந்தாட மிரட்டிக் கொண்டிருந்தாள் இளம் பெண்ணொருத்தி.

அழகு தான் யாரையும் உறுத்தாத எளிமையான அழகு. ஆனால் அதில் ஒரு நிமிர்வு இருந்தது.

மீண்டும் குழந்தையிடம் நெருங்கியவள் குழந்தையின் அம்மாவிடம் பேச்சு கொடுத்தாள்.

குழந்தையை அப்படியே கொஞ்ச தொடங்கினாள். குழந்தை மொழி பேசி இயல்பாக தலையாட்டி சிரித்து விளையாடும் இன்னொரு குழந்தை போல் தோன்ற அவளை ரசிக்க தொடங்கினான்.

சில நொடி விளையாடினாலும் மீண்டும் அவளிடம் உதட்டை பிதுக்கி பிள்ளை மொழியில் பேசி அழும் குழத்தையை பார்த்து தானும் உதட்டை பிதுக்கி அழ தயாரானவள் குழந்தையை வாங்கி கொண்டு அதன் உடம்பில் சோதனை செய்தாள்.

குழந்தையின் முட்டி மடங்கும் இடத்தில் இரண்டு எறும்புகள் கடித்து கொண்டிருக்க, பிள்ளை மொழியில் அதை கூறியது போலும் குழந்தை.

என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு)Where stories live. Discover now