8

714 23 0
                                    

தன் வீட்டிற்கு போன் செய்து நடந்ததை சுருக்கமாக கூறினான் ஷிவா.

"சரிப்பா. நடந்தது நடந்துருச்சு. அந்த புள்ளைய இங்க கூட்டிட்டு வா பார்த்துக்கலாம்." என்றார் அவனின் தந்தை.

"சரிப்பா." என்று வைத்தவனின் பார்வை மட்டும் அறிவழகியின் முகத்தில் நிலைத்திருந்தது.

அவளின் அருகில் வந்து நின்றவன், "ஹூக்கும்..." என்று செருமவும் திரும்பி பார்த்த அறிவழகி எழுந்து கொண்டாள்.

இருவரும் அங்கிருந்து கிளம்பியதும் நேராக ஒரு ஹோட்டலில் வண்டியை நிறுத்தினான்.

"எதுக்கு இங்க? எனக்கு பசிக்கலை." என்றாள் வெடுக்கென்று.

"உனக்கு பசிக்குதுன்னு யார் சொன்னது? எனக்கு தான் தலை வலிக்குது. மதியாணத்துலர்ந்து பச்சை தண்ணிக்கூட பல்லுல படலை. ஒரு காபியாவது குடிச்சுட்டு போலாம்." என்றவன் நிற்காமல் உள்ளே சென்றான்.

'திமிரு புடிச்சவன்... ஒரு காபி குடிச்சுட்டு போலாம்னு சொன்னா என்ன குறைஞ்சா போயிருவான் தடிமாடு.' என்று புலம்பியபடி உள்ளே சென்று அவனுக்கு எதிரே அமர்ந்தாள்.

சூடாக இரண்டு மெதுவடை தட்டில் கொண்டு வந்து வைக்கவும், அறிவழகியின் கண்கள் விரிந்தது.

'திமிரு பிடிச்சவ.. பசிக்குதுன்னு சொன்னா என்ன வாங்கியா தரமாட்டேன். கண்லயே பசியை வச்சுக்கிட்டு இந்த திமிருக்கு ஒன்னும் குறைச்சலில்லை. பார்க்கிறா பாரு முட்டை கண்ணை வச்சு...' என்று உள்ளுக்குள் புலம்பியவன் அவளை பார்த்து ஒற்றை புருவம் ஏற்றி என்ன என்றான்.

'ஒன்னுமில்லை.' என்று தலையாட்டினாள்.

"வேற ஏதாவது வேணுமா சார்?" என்ற சப்ளையரிடம்

"ஒரு காபி" என்றவன் "உனக்கு?" என்றான்.

"எனக்கு எதுவும் வேணாம்." என்றாள் திமிராக.

'இது தான்டி. இந்த திமிருக்காக தான் உன்னை பிடிச்சது. ஹ்ம்ம் இப்போ என் பொண்டாட்டியாவும் இருக்க.' என்று நினைத்தவன்.

என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு)Where stories live. Discover now