16

685 21 0
                                    

"பம்ப்ச் எஸ்கேப் ஆகிட்டாடா.." என்று வேகமாய் வெளியேறியவன் அழகியை தேட, அவசரமாக தன் பையை எடுத்து கொண்டு கிளம்பிக் கொண்டிருந்தாள்.

"எங்க எஸ்கேப் ஆகுற? இதோ வரேன்." என்று அவள் முன் போய் நின்றான்.

"என்ன?" என்றாள்.

"சாப்பிட்டியா?"

"இல்ல. டைம் ஆகிருச்சு. எடுத்துகிட்டேன். அங்க போய் சாப்பிடறேன்." என்று நகர பார்த்தாள்.

"வா நான் கொண்டு போய் விடறேன்." என்றான் ஷிவா.

"இல்ல நான் பஸ்லையே போய்கிறேன்." என்றாள் அழகி.

"இப்போ நீ என்கூட வரலைன்னா காலேஜ்க்கு போக முடியாது. உனக்கே தெரியாம டி.சி வாங்கிடுவேன் எப்படி வசதி?" என்றான்.

அவனை முடிந்த வரை முறைத்தவள்,

"சரி வந்து தொலைக்கிறேன். எல்லாம் என் தலையெழுத்து." என்று முணுமுணுத்து கொண்டே நகர்ந்தாள்.

"என்ன சரியா கேட்கலை நீ பேசினது?" என்றான் ஷிவா.

"ஒன்னுமில்லை போகலாம். ஆன்டி நான் போய்ட்டு வரேன்." என்று வெளியேறினாள்.

தன்னை கடந்து போகும் அழகியை ரசிக்கும் நேரத்தில் கவனித்துவிட்டான் அவள் மறைத்துவிட்டாள் மங்கல்யத்தை என்று.

இருவரும் இருசக்கர வாகனத்தில் கிளம்பியதை பார்த்து கொண்டிருந்த பக்கத்து வீட்டு பார்வதி.

"என்னக்கா யாரு இந்த பொண்ணு புதுசா இருக்கு. அதுவும் நம்ம சிவாவும் அந்த பொண்ணும் ஜோடியா போறாங்க?" என்றாள் அவர்கள் போன திசையை பார்த்து கொண்டே.

"என் அண்ணன் பொண்ணு தான் பார்வதி. நம்ம சிவாவுக்கு இவளுக்கும் தான் பேசி முடிச்சிருக்கோம். இங்க தான் ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறா. அங்க சாப்பாடு சரியில்லாம ரொம்ப உடம்பு சரியில்லாம போயிடுச்சு. இன்னும் காலேஜ் ஆறு மாசத்துக்கு தான் இருக்கு. அதான் இங்க கூட்டிட்டு வந்துட்டேன். காலேஜ் முடிச்சபிறகு கல்யாணமாகி இங்க தானே வர போறா." என்று விட்டு உள்ளே வந்தார்.

என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு)Where stories live. Discover now