INTRODUCTION

1.5K 15 3
                                    

இந்த கதைல வர முக்கிய கதாபாத்திரம் எல்லாரையும் ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வந்துரலாம்.ஒரு ஊர்ல ஒரு தாத்தா பாட்டி இருந்தாங்க (என்னப்பா காலகாலமா இப்படி தான கத சொல்லுவாங்க )

ராமன் -சீதாஅவங்க அந்த ஊரல் செல்வாக்கு இருக்க முக்கிய குடும்பம் ,வயல் ,தோப்பு ,மில்,இப்படி வசதி உள்ள குடும்பம் .இவங்களுக்கு 1பையன் 2 பொண்ணு .

அவர் பையன் கண்ணன் தான் மூத்தவாரிசு .அடுத்து பிறந்தவர்கள் தான் கோகிலா,அவங்களுக்கு அப்புறம் செல்வி .

இவங்க 3 பேரையும் நல்ல'படிக்கவைக்க அசைபட்டாங்க.அவங்க ஆசைப்பட்ட மாறியே கண்ணனும் செல்வியும் நல்லா படிச்சாங்க,ஆனா பாருங்க கோகிலாக்கு படிப்பு புடிக்கல ,ஏதோ உருண்டு பிரண்டு 12ஆவது வர முடிச்சுட்டாங்க .

கோகிலாக்கு கல்யாணவயசு வந்ததும் மாப்பிள்ளை பாக்குறாங்க .ஆனா அவங்கள கஷ்டப்படுத்தாம நாம கோகிலா எனக்கு குணா மாமா பையன் ரமணனை புடிச்சுருக்குனு சொல்லவும் ஆகா இது நல்ல யோசனையா இருக்கே ,யாருக்கோ கட்டிக்குடுக்குறதுக்கு நாம அண்ணன் பையனுக்கு கட்டிக்குடுக்குறது நல்லதுன்னு சீதா பாட்டி சொல்ல ,பொண்டாட்டி சொன்ன சரியா தான் இருக்கும்னு ராமன் தாத்தாவும் சம்மதம் சொல்ல கோகிலா ரமணன் திருமணம் நல்லபடியா முடிஞ்சுது.

கோகிலா கல்யாணம் முடிஞ்சு 2 வருஷத்துல கண்ணனுக்கும் ரமணன் தங்கை பாவனிக்கும் கல்யாணம் பணிவைக்குறாங்க.சீதாப்பாட்டியோட அண்ணன் குணாவும் அந்த ஊர்ல வசதியானவாங்க தான்.இப்படி ரெண்டு பசங்களையும் சொந்தத்துல கட்டி வச்சாங்க ,அனா செல்வி அவங்ககூட படிச்சா மகேஷ் லவ் பண்ணாங்க .மகேஷோட பேமிலி சிட்டில இருக்க upper middle class family .கிராமத்துல இருக்க ராமன் சீதா அளவுக்கு பணக்காரங்க இல்லாட்டியும் படிப்பையும் உழைப்பை நம்புறவங்க.பொண்ணு ஆசைப்பட்டதால ராமனும் மகேஷ் செல்வி கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாரு.ராமன் சீதா சம்மதிச்சு கல்யாணம் பண்ணிவைச்சாலும் கண்ணனுக்கு எனோ மகேஷ் மேல அபிப்ராயம் வந்தது இல்ல .சொந்தத்துல குடுத்து இருக்கலாம் னு ஒரு எண்ணம் எப்போவும் இருக்கும்,இது அடிக்கடி அவர் பேச்சுலயும் நடவடிக்கைலயும் காட்டவும் செஞ்சு இருக்காரு.இதுனாலயே செல்வி அதிகம் ஊருக்கு வரத்து இல்ல ,மகேஷும் படிப்பையும் உழைப்பையும் வச்சு சில பல வருஷத்துல பெரிய லெவல் வளர்த்துட்டாரு ..இன்னிக்கு சிட்டில இருக்க பிரபல ABHINAV HOTEL CHAINS இன் முதலாளி.

முதல்ல கல்யாணமான கோகிலா ரமணன் தம்பதிக்கு இப்போ 28 வயசுல ஒரு மகன் இருக்கான் ,பேரு வாசுதேவ்.MSC அக்ரி பட்டதாரி ,அப்பா ரமணனோட மில் ,தோப்பு ,வயல் எல்லாத்தையும் பார்த்துக்குறது அவன் தான்.இவர் தங்க நாம கதாநாயகன்.(ரொம்ப லேட்டா என்ட்ரி தரனோ )பெத்தவங்களுக்கு ஓரேபையன் மட்டும் இல்ல பொறுப்பான பையனும்கூட.ஊர்லயே இருக்கான் ,படிப்பு முடிச்சுட்டு அப்பாக்கு துணையை இருக்கான்,இவன் பொறுப்பு எடுத்தபிறகு படிச்சபடிப்ப வீணாக்காம விவசாயத்துல சில ஐடியா நடைமுறைப்படுத்தி லாபம் அக்கிருக்கான்.

இரண்டாவதாக கல்யாணம் பண்ண கண்ணன் பவானி தம்பதிக்கு ஒரு பொண்ணு ஒரு பையன்.பொண்ணு பேரு அனன்யா பையன் பெரு அபினவ்.இந்த அனன்யா தங்க நாம ஹீரோயின்.

அனன்யா 21 வயசு அழகான பட்டாம்பூச்சி.அன்பான அழகான அறிவான ,முக்கியமா சுதந்திரமான பொண்ணு

அவளுக்கு ரொம்ப புடிச்சது அவளோட செல்வி அத்தையும் மகேஷ் மாமாவும்தான்.அதுக்கு காரணம் அவ அப்பா கண்ணன் செல்வி மகேஷ்க்கு காட்டும் பாரபட்சம் தான். பொண்ணு எடுத்து பொண்ணு குடுத்ததால கண்ணனுக்கு எப்போமே கோகிலா ரமணன் ஒசத்தி.செல்வி தங்கச்சிதான் அவ மேல பாசம் உண்டு தான் ஆனா ரமணன் மேல இருக்க ஓட்டுதல் மகேஷ் மேல வரல.கணவன் மதிக்கப்படாத எடத்துல நமக்கு என்ன வேலைனு செல்வியும் ஒதுங்கிட்டாங்க.இது காரணமாவே அனன்யாக்கு செல்வ அதை மகேஷ் மாமா தான் புடிக்கும்.லீவு வந்த அங்க தான் இருப்பா.உன் drawing நல்லா இருக்கு,உன் கிரீடிவிட்டி நல்லா இருக்கு எப்போதுமே அவளை பாராட்டி,அவ திறமைகளை ஊக்குவிச்சது மகேஷ் தான்.பொண்ணு தைரியமா இன்டெபெண்டண்ட் அ இருக்கனும் னு அவளுக்கு அட்வைஸ் பண்ணி அவளை தைரியமான பொண்ணா வளர காரணமும் மகேஷ் தான்.அனன்யாக்கு ஜிவெள்ளரி டெசினிங்(JEWELLERY DESIGNING)  மேல அப்படி ஒரு passion.12த் முடிச்சதும் மாமா கூட பேசி விசாரிச்சு அதுக்கேத்த படிப்பை படிக்க முடிவுபண்ணா.பொண்ணு ரொம்ப ஆசைப்பட்டதால கண்ணனும் சம்மதம் தெரிவிச்சு அவபடிக்க விரும்பின Birmingham City University, Birmingham,அனுப்பிவச்சாங்க.

அங்கேயே 3 வருஷம் இளங்கலை பட்டம் முடிச்சு இப்போ முதுகலை பட்டம் முதல் ஆண்டுல கால்வச்சுஇருக்கா.


மனம் ஏங்குதேWhere stories live. Discover now