CHAPTER 30

101 4 1
                                    

சிறையில் இருக்கும் கோகிலவை வெளியில் எடுக்க எல்லா முயற்சியும் செய்து விட்டார் குணா, எதுவும் வேலைக்கு ஆகவில்லை.சரி ராமன் இப்போது தன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி இருக்கிறான்,கோவம் தீர்ந்த பின்பு ஓர் இரு நாட்களில் கோகிலாவை வெளியில் கொண்டு வந்து விடுவார்கள் என்று நினைத்தார்.ஆனால் அப்படி ஏதும் நடந்தபாடு இல்லை.அதற்கு மாறாக மகேஷிற்கு ஆதரவாக மின்சிடர் வரை சிபாரிசு செய்ததால் வழக்கு பலமாக பதிவு செய்யப்பட்டது.கடத்தல் வழக்ககுடன் கொலை முயற்சி வழக்கும் சேர்ந்து பதிவு செய்யபட்டு உள்ளது. இது கேள்வி பட்டு தான் குணா பொங்கி எழுந்து மச்சான் வீட்டிற்கு நியாயம் கேட்டு வந்து விட்டார்.

வாசலில் வந்து நின்ற குணா வேணி ஜோடி முதலில் பார்த்து  ரமணனை தான்.மனைவி சிறையில் இருக்கிறாள் என்ற உணர்வே இல்லாமல்  கையில் காபி வைத்து கொண்டு சுவாரஸ்யமாக செய்தி தாள் படித்து கொண்டு அருகில் அமர்ந்து இருந்த கீதாவிடம் செய்தி தாளில் படித்ததை சொல்லி கொண்டு சிரித்து பேசி கொண்டு இருந்தார். குணாவிற்கு இது இன்னும் கோவத்தை கிளறியது .வேகமாக சென்று செய்தி தாளை பிடிங்கி தூர எறிந்தார் .ரமணன் சட்டையை பிடித்து "ஏன்டா மனுஷனாடே நீ?பொண்டாட்டி ஜெயிலில் இருக்க ,நீ இங்க உட்காந்து சந்தோசமா காப்பி குடிச்சுட்டு ,அவளை உள்ள வச்சவன் பொண்ணுக்கிட்டயே சிரிச்சு பேசிட்டு இருக்க?உனக்கு வெட்க்கமா இல்லை ?" என்று வீடு அதிரும் படி கத்தினார்.

சத்தம் கேட்டு அனைவரும் ஹாலிற்கு வந்தார்கள் .ரமணன் மெல்ல தந்தை கையை சட்டையில் இருந்து விளக்கி விட்டு "இப்போ ஏன்ப்பா வந்ததும் வராததும் இவ்ளோ கோவப்படுறீங்க ?வயசான காலத்துல இவ்ளோ கோவமெல்லாம் உடம்புக்கு ஆவது ,பொறுமையா இருங்கப்பா ,இப்படி வாங்க ,உட்காருங்க ,பொரும்மையா சொல்லுதுங்க என்ன விஷயம் ?"
இதை கேட்டு மேலும் கோவமானர் குணா "டேய் உன் பொண்டாட்டி ஜெயில்ல இருக்க ,நீ என்னடானா பொறுமையா பேசு மையிரா பேசுன்னுட்டு இருக்க ?என்ன பார்த்தஎப்படி இருக்கு உன்னக்கு "என்று எகிறினர்

மனம் ஏங்குதேWhere stories live. Discover now