CHAPTER 25

310 10 4
                                    


கண்ணன் ஒருக்காலமும் மகேஷை மதித்தது இல்லை ,செல்வியின் திருமணத்தின் பொழுதும் சொத்துக்காகத்தான் தன் தங்கையை திருமணம் செய்கிறான் என்று எலமனாக பேசினார் ,இப்பொழுதும் அதே மனநிலையில் தான் கண்ணன் இருந்தார் ,இதற்க்கு கோகிலாவும் ஒரு காரணம் .திருமணத்தை நிறுத்தவே மகேஷ் நாடகம் நடத்துகிறான் என்று எண்ணிய கண்ணன் "உன்னையெல்லாம் வைக்கவேண்டிய இடத்துல வச்சு இருக்கணும் ,நாலு பணம் காசு சம்பாரிச்சுட்டா நீ என்ன பெரிய இவானா?என் தங்கச்சியை பார்த்து என்ன பேசுற?"என்று பொரிந்து தள்ளினார் .ஏற்கனவே தன் மகளை கோகிலா கடத்தியதற்கு பொங்கிக்கொண்டு இருந்த செல்வி வெடித்து சிதறிவிட்டால் "வாய்மூடுடா ,என் புருஷன பத்தி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு?சுயமா சொந்தகாசுல வளர்ந்து இருக்கும் அவர் எங்க ,அப்பா காசுல தொழில் தொடங்கின நீ எங்க?இவ்ளோ வயசாகுதே அறிவு கொஞ்சமாச்சு இருக்காடா உனக்கு?நீயெல்லாம் என் அண்ணேன்னு சொல்லவே அசிங்கமா இருக்கு ,நீ பெத்த பொண்ணு உன்னை சல்லிக்காசுக்கு மதிக்காம தூக்கிபோடுபோறாளே அப்போவாச்சு அறிவு வரவேண்டாம் உனக்கு?இங்க பார் இந்தக்குடும்பத்துக்கு இதன் கடைசி எச்சரிக்கை எவனாவது என் புருஷனை இனிமேல் தப்பா பேசினீங்க மரியாதையை கேட்டுரும் பார்த்துக்கோங்க ,ஏய் கீதா அந்த வீடியோவை இவனுக்கு காட்டு ,அப்போவாச்சு அவன் தொங்கச்சி உண்மையான முகம் புரியுதான்னு பார்ப்போம்'என்று பொரிந்துவிட்டு வெளியே சென்று விட்டால் .

வெளிய அபினவ் காட்டிய வீடியோவை பார்த்த பாட்டியோ அதிர்ச்சியின் எல்லைச்சு சென்று மயங்கியே விட்டார் .பாட்டி மயங்கியதும் பதறிய அபி "பாட்டி பாட்டி "என்று கத்தினான் .அபியின் சத்தம் கேட்டு சுயநினைவுக்கு வந்த வாசு பாட்டியை நோக்கி ஓடி வந்தான் .அனன்யா பாட்டி முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினால் .எழுந்த பாட்டி இன்னும் அதிர்ச்சிமரமல் அழைத்துவங்கி விட்டால் ."இப்படி ஒரு கொலைகாரியையா நான் பெத்தேன்?பெத்த அப்பாவையே கொலைசெய்ய துணிஞ்சுட்டாலே பாவி ,இவ பேச்சை கேட்டு என் பேரப்பசங்க வாழ்க்கையை நாசமாக்க பார்த்துட்டேனே,உங்க தாத்தாக்கு தெரிஞ்சா என்னை மன்னிக்கவே மாட்டாரே " என்று அழுது கொண்டே மீண்டும் மயங்கிவிட்டார் .தண்ணீர் தெளித்தும் எழவில்லை .

மனம் ஏங்குதேWhere stories live. Discover now