CHAPTER 20

357 12 6
                                    


அனன்யா வாசுவை அவன் ரூமில் தேடிவிட்டு மாடிக்கு வந்த போது வாசு போனில் யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தான் "அதே தான் அதே தான் .நான் அனன்யாகிட்ட இப்போ பேசணும் .தேங்க்ஸ் டா மச்சான் .நான் அவ கிட்ட பேசிட்டு உனக்கு பேசுறேன்"என்று வேக வேகமாக பேசினான் .அவன் மிக பரபரப்பாக காண பட்டான்.

என்னாயிற்று இவனுக்கு என்று எண்ணிய அனன்யா வாசுவை பார்த்து "மாமா "என்று அழைத்தால்.அனன்யா குரல் கேட்டு திரும்பியவன் அவளை பார்த்து "அனன்யா ,நானே உன்னை பார்க்க வர இருந்தேன் ,முக்கியமான விஷயம் சொல்லணும் "

அனன்யா :நானும் அதுக்கு தான் வந்தேன் மாமா .

வாசு :நான் முதல் பேசிடுறேன் அனன்யா..வீட்டில் இருக்கவங்க ஏற்பாடு பண்ண இந்த கல்யாணத்துக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை .இது பத்தி எதுவும் என்னக்கு சத்தியமா தெரியாது .தெரிஞ்சு இருந்த உங்கிட்ட அவங்க பேசுறதுக்கு முன்னாடியே இதை தடுத்து இருப்பேன் அனன்யா.என்னை நம்பு.அவங்க செய்யுறதை வச்சு என்னை தப்பா நெனைச்சு வெறுத்திடாதே அனன்யா (இதை சொல்லும்போதே அவன் கண் கலங்கியது )

அனன்யா :ஐயோ மாமா ,நான் உங்களை தப்பா நெனைக்கவேயில்லையே ,நீங்க இதுலாம் என்கிட்ட சொல்லவே வேண்டாம்.இங்க நடக்குறதுல நீங்களும் நானும் ஒரே நிலை தான் .ரெண்டு பேருமே இதுல பாதிக்கப்பட்டு இருக்கவங்க தான் .நான் ஒரு நொடி கூட உங்கள சந்தேக படலை .இன்னும் நான் உங்களை மாமான்னு தானே கூப்பிடுறேன் ,அப்போவே தெரியவேணாமா நான் உங்களை தப்பா நினைக்கலைனு ?

வாசுவிற்கு ஏதோ பெரிய பாரம் தோளில் இருந்து இறங்கியது போல் இருந்ததுசந்தோஷத்தில் அனன்யாவின் கையை பிடித்து "தேங்க்ஸ் குட்டிமா ,எங்க என்னை தப்பா நெனைச்சுட்டியோன்னு பயந்துட்டேன்" என்றான் .

அனன்யா :அதுலாம் இல்லை மாமா ,ஒரு விஷயம் உங்க கிட்ட சொல்ல தான் வந்தேன்

வாசு :நானும் ஒரு விஷயம் சொல்லனும்டா

அனன்யா :நீங்க முதல் சொல்லுங்க மாமா ,இப்போ நான் வரப்போ யார் கிட்டயோ போன்ல பேசிட்டு இருந்தீங்களே?அதை பத்தியா பேசணும்?

மனம் ஏங்குதேOù les histoires vivent. Découvrez maintenant