CHAPTER 19

297 13 3
                                    


அனன்யா திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டு சென்றபின் பாட்டி அறையில் இருந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டாலும் அனன்யாவின் நிபந்தனை என்னவாக இருக்கும் என்று குழம்பினார்கள்.அதை வாய்விட்டு கேட்டு விட்டால் பவானி ."அப்படி என்ன கண்டிஷன் வச்சு இருப்பா?வக்கீல் வந்து பேசுற அளவுக்கு என்னவா இருக்கும் "என்று கேட்டாள்."எதுவா இருந்தாலும் சரி ,அவ கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதே போதும் ,அவ என்ன கேட்டாலும் செஞ்சுருவோம் "என்றார் பாட்டி ."

கண்ணன் :அனன்யா சம்மதம் சொல்லிட்டா ,வாசு இப்போ சம்மதிக்கணுமே?

சீதா :அனன்யா சம்மதம் சொல்லுறது தான்பா கஷ்டம் ,வாசுகிட்ட நாளைக்கு நான் பேசிக்குறேன் ,அவன் சம்மதம் சொல்லுவான் .நீங்க எல்லாம் இப்போ போய் தூங்குங்க .

"சரிம்மா ,என்னமோ எல்லாம் நல்லபடியா நடந்தா சரிதான்"என்று சொல்லிவிட்டு அவர் அறைக்கு சென்றார் கண்ணன் .அவர் சென்ற 10 நிமிடத்தில் அவர் அறைக்கு வந்தால் கோகிலா.

கண்ணன் :என்னாச்சு கோகிலா,இப்போ தானே எல்லாரும் அம்மா ரூமில் இருந்து வந்தோம்?

கோகிலா :அது இல்லை அண்ணா ,முக்கியமான விஷயம் பேசணும்,உன்கிட்டயும் அண்ணிகிட்டயும் முதல் பேசிட்டு அப்புறம் அம்மா கிட்ட பேசலாம் நெனச்சேன் அதான் வந்தேன்

கண்ணன்:சொல்லுமா என்ன விஷயம்?

கோகிலா : எனக்கு அனன்யா இந்த கல்யாணத்து சம்மதிச்சது நம்ப முடியலை அண்ணா ,அவ வேற ஏதோ பிளான் பண்ணற தோணுது .

கண்ணன் :அவ தான் அவ கண்டிஷன்க்கு சம்மதிச்சா கண்டிப்பா கல்யாணம் செஞ்சிப்பேன்னு எழுதி தரேன் சொல்லுறாளே ?

கோகிலா :அனன்யா நம்ப யாரையும் மதிச்சதே கிடையாது ,இன்னிக்குக்கூட அண்ணி செத்துப்போய்டுவேன்னு மிரட்டினப்போ எனக்கு என்ன வந்துச்சுனு இருந்தா,இப்போ அண்ணி அந்த செல்வியை கேள்வி கேட்ட அண்ணிமேலே கண்ணாடி எடுத்து வீசுறா ,நீங்க அப்பா அம்மாவே இல்லைனு சொல்லுறா .அவ உறவுக்கும் சம்பிரதாயத்துக்கு மதிப்பு குடுக்குறவா கிடையாது அண்ணா ,நாளைக்கு ஊரை கூட்டி கல்யாணம் பண்ணதும் அவ தாலியை கழட்டி தூக்கி போட்டு போனாலும் போவா .என் பையன் தான் ஊர் முன்னாடி அவமான பட்டு நிக்கணும் .

மனம் ஏங்குதேWhere stories live. Discover now