CHAPTER 7

396 11 5
                                    


அனன்யா POV

2 நாளாக சரியான தூக்கம் இல்லாதது ,இங்கு வந்ததில் இருந்து கோகிலா கிளப்பிய பிரெச்சனைகள் ,பின்பு நான் ஏதோ தள்ளி போவது போல் அப்பா பேசியது அனைத்தும் சேர்ந்து தலை வலிக்க ஆரம்பித்தது.செல்வி அத்தையிடம் சொல்லிவிட்டு கிளம்பலாம் வந்தால் அத்தையை காணவில்லை.அதற்குள் அபிஷேக் என்னை முறைத்து கொண்டு வந்தான்.இவனுக்கு இப்போ என்ன பிரச்சனை?இவன் வேற இப்போ என்ன கேக்கபோறானோ.

வந்தவன் என்னை முறைத்து கொண்டு இருந்தான்.அங்கு நிற்க பிடிக்காமல் நான் நகர

அபிஷேக் :ஒரு நிமிஷம்

அனன்யா :சொல்லு அபிஷேக்

அபிஷேக் :நீ தான் அவளுக்கு மொபைல் வாங்கி குடுத்தியா

அனன்யா :ஆமா

அபிஷேக் :அப்போ ஏன் எனக்கு ஏதும் வாங்கிட்டு வரல?

அனன்யா :ஷாப்பிங் போக டைம் இல்ல ,அதான் அன்னிக்கே சொன்னானே

அபிஷேக் :அவளுக்கு அவ கேக்காமலே வாங்கி வச்சு இருக்கே.உன் தம்பி நான் தானே ?எனக்கு ஏன் வாங்கிட்டு வரல?

நேரம் ஆகஆக தலைவலி கூடிக்கொண்டே போனது

அனன்யா :நீ எப்போ என்கிட்ட பேசின?எப்போவாச்சு தம்பியா நீ நடந்து இருக்கியா?அப்புறம் என்ன உரிமைல என்கிட்ட கேள்வி கேக்குற?

அபிஷேக் : நீ எல்லாம் எனக்கு ஒன்னும் வாங்கி தர வேணாம் .எனக்கு அப்பா வாங்கி தருவார்.

அனன்யா :அப்போ போய் அவர்கிட்ட கேளு என்கிட்ட கேக்காத

அபிஷேக் :நீ இப்படி இருந்தா யாரு உங்கிட்ட பேசுவா?அப்பா அம்மாக்கு கூட உன்னை பிடிக்காது தெரிஞ்சுக்கோ.

இவன் பேச்சு கோவத்தை கிளற தலைவலி உச்சத்தை எட்டியது,பொறுமையை காத்தில் விட்டு கத்திவிட்டேன்

அனன்யா :யாருக்கும் என்னை பபிடிக்கணக்கும்னு எந்த அவசியமும் இல்லை.உங்களுக்கு என்ன என்னை பிடிக்குறது?எனக்கு உங்களலாம் சுத்தமா பிடிக்கலை.அதுனாலதான் இங்க இருக்க புடிக்காம UK போனேன்.ஒரு நாள் பாசமா பேசுனது இல்ல ,நல்லா இருக்கானா இல்லையா கேட்டது இல்ல ,அக்கறையா நடிச்சது கூட இல்ல ,வெக்கமே இல்லாம எனக்கு என்ன வாங்கிட்டு வந்தேன்னு கேக்குற?எப்புடி இவ்ளோ SELFISFHஆ இருக்கமுடியுது உன்னால?வயசுக்கு ஏத்தமாரி பேசு.சின்ன பையனாச்சேனு பாக்குறேன் இல்லனா அறைஞ்சுருவேன்.

சத்தம் கேட்டு அனைவரும் அங்கு கூடிவிட்டார்கள் .அபிஷேக் கண்ணை கசக்கிக்கொண்டு அம்மாவிடம் சென்றுவிட்டான்.வெறும் வாயுக்கு அவல் கிடைத்தாற்போல் கோகிலா ஏதோ பேச வாய் திறக்க நான் முந்தி கொண்டு ,"அபினவ் கெளம்பலாமா ?தலை ரொம்ப வலிக்குது "சரி என்று அபினவ் சொல்ல நான் அபி,கீதா செல்வி அத்தை அங்குஇருந்து கிளம்பிவிட்டோம்.

காரில் யாரும் ஏதும் பேசவில்லை .சின்ன பையன் கிட்ட ரொம்ப கோவப்பட்டுட்டோமோ?ஆனா அவன் பேசினது மட்டும் சரியா?என் கிட்ட என்றாவது தம்பியா நடந்துஇருக்கான?என்னிக்குமே எனக்கு குடுப்போறந்தவங்க மாரி பாசம் காமிச்சது அபினவ் மற்றும் கீதா தான்.அவங்க கிட்ட நான் பாசம் காட்டுறது என்ன தப்பு?யோசிக்க யோசிக்க தலைவலி ஏறியது ,வீடும் வந்து சேர்ந்தது.வீட்டுக்கு வந்ததும் நேராக சென்று தூங்கிவிட்டேன்.

மனம் ஏங்குதேWhere stories live. Discover now