CHAPTER 14

337 11 2
                                    


தாத்தா கட்டிய புதுவீடு அனைவருக்கும் மிகவும் பிடித்து இருந்தது.வீட்டை சுற்றி இருந்த மல்லிகை கொடியும்,முல்லை கொடியும் மாலை வேலையை மயக்கியது.புதுமனை புகு விழா முடிந்தத்தில் இருந்து கோகிலா ஒரு யோசனையுடனே இருந்தால்,ஏதும் பிரச்னை கிளப்பி விடுவாள் என்று தாத்தா கவலை பட்டார்.

அதேபோல் கோகிலா அனைவரும் மாலை தேனீர் அருந்தும் போது

கோகிலா : அப்பா, நான் உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்.

தாத்தா: சொல்லு கோகிலா,என்ன பேசணும்?

கோகிலா:அப்பா, நேத்து வந்தவங்க எல்லாரும் வாசுக்கு எப்போ கல்யாணம் கேட்டாங்க.வாசுக்கு கல்யாணம் பணிவைக்கலாம் இருக்கேன்..நீங்க சரி சொன்ன ஜோசியர் பார்த்துட்டு தரகர் கிட்ட பொண்ணு பார்க்க சொல்லலாம்.என்ன சொல்லுறீங்க??

எங்கே நேற்று அனைவரும் அனன்யா வாசுவை ஜோடியாக பேசியதும் கோகிலா வாசுவிற்கும் அனன்யாவிற்கும் கல்யாணம் செய்யவேண்டும் என்று கேட்டு அனன்யாவை சங்கடப்படுத்திவிடுவாள் என்று பயந்துஇருந்த தாத்தா,செல்வி ,மகேஷ் இப்பொது தான் நிம்மதி அடைந்தார்கள்

தாத்தா மிக சந்தோசமகி விட்டார்.:அட இது ரொம்ப நல்ல விஷயம்..நல்ல நாள் பாரு, ஜோசியர் வர சொல்லிரலாம்.கோகிலா இன்னிக்கு தான் நீ ஒரு ஒருபுடியான விஷயம் சொல்லி இருக்க.

கோகிலா :(இந்த அப்பாக்கு என்னை குறை சொல்லுறதே வெள்ளை என்று மனதில் பொரிந்து கொண்டு )சரி அப்பா நீங்க சொல்லுற மாரி செய்வோம்.

தாத்தா :வாசு நீ என்ன சொல்லுற?

வாசு :தாத்தா நீங்க பார்த்து முடிவு பண்ணுங்க,உங்க முடிவு எப்போவும் சரியாய் இருக்கும்

தாத்தாவிற்கு பேரன் தன் மேல் வைத்த நம்பிக்கை பெருமை தந்தது.அடுத்தநாளே நல்ல நாளாக இருப்பதால் ஜோசியரிடம் சென்று வந்தார்கள்.தராகரிடம் சொல்லி பெண் பார்க்கவும் சொல்லிவிட்டார்கள்.எல்லாம் நன்றகா செல்ல தாத்தா உடல்நிலை சரி இல்லாமல் சென்றது .முழிச்சு அதிகம் வாங்கியது ,நடக்க சிரமப்பட்டார் . அலைச்சலும் ,வயோதிகமும் காரணம் என்று எண்ணி அவரை ஒய்வு எடுக்க சொல்லி விட்டார்கள்.

மனம் ஏங்குதேWhere stories live. Discover now