CHAPTER 11

397 13 9
                                    


அனைவரும் விருந்துக்கு வேண்டியவற்றை முடிவு செய்துவிட்டு வீடு திரும்பினர் .நேராக வாசு வீட்டிற்கு தான் சென்றார்கள்.சிரித்த முகத்துடன் வந்த அனன்யாவையும் ,அவளையே சுற்றி வந்த அபிஷேக்கையும் தாத்தா பாட்டி பார்த்து நிம்மதி அடைந்தார்கள்.அனைவரும் தேனீர் பருகும் போது தனக்கு தந்த வடையை அபிஷேக் அனன்யா தட்டில் வைக்க அதை பார்த்த பாட்டி "டேய் அபி',வடைக்கு பெரிய சண்டையே போடுவ ,நீயா அனன்யாக்கு உன் வடையை குடுத்த ?"என்று கேள்வி கேட்க "என் அக்காக்கு நான் தரேன் உனக்கு என்ன பாட்டி ?"என்று கேட்கே அனைவரும் சிரித்துவிட்டனர்.

அனன்யா :தாத்தா பாட்டி ,நாளை மறுநாள் செல்வி அத்தை வீட்டுல எல்லாரும் நைட் டின்னர் சாப்பிடலாம் .எல்லாரும் அங்க வந்துருங்க.

பாட்டி :சரிடா .நீ சொன்ன கேக்காம இருப்போமா ?

அனன்யா :தேங்க்ஸ் பாட்டி

அனன்யா செல்வியிடம் கிளம்பும் போது அபி முகம் வாடி விட்டது ,அதை பார்த்த வாசு அனன்யாவிற்கு கண்ஜாடை காட்ட ,"அபி,என்கூட வரியா?அங்க கொஞ்சம் சாக்லேட் வச்சு இருக்கேன்?"என்று அனன்யா கேட்டது தான் தாமதம் ,ஓடி சென்று அவன் துணி இருந்த பையுடன் வந்து "நான் ரெடி ,கிளம்பலாம் "என்று அனன்யா கையை பிடித்து கொண்டான்.

அதை பார்த்த செல்வி கண்கள் லேசாக கலங்கியது.

தாத்தா பாட்டியிடம் சொல்லிவிட்டு வந்த அனன்யா வாசுவிடம்

அனன்யா :"வரேன் மாமா,நாளைக்கு காலையில் சீக்கிரம் வந்துருங்க ,தேவையானது வாங்கிட்டு வந்துரலாம் "

வாசு :சரிம்மா ,பார்த்தப்போ ,நல்லா ரெஸ்ட் எடு .நாளைக்கு பாக்கலாம்.

அவனை பார்த்து சிரித்து விட்டு கிளம்பிவிட ,இவர்கள் உரையாடலை பார்த்து வாசு வீட்டில் அனைவரும் ஆச்சிர்யத்தில் சிலையாகி விட்டார்கள்.முதலில் சுதாரித்த பாட்டி

பாட்டி :வாசு ,அனன்யா இப்போ உன்கிட்ட நல்லா பேசுரால?இது எப்போ நடந்துச்சு

மனம் ஏங்குதேWhere stories live. Discover now