CHAPTER 23

279 14 4
                                    


கோகிலாவின் அறையில் எட்டி பார்த்த கீதா "இந்த ஆண்ட்டி எங்கயோ பார்த்து இருக்கோமே யாரு?"என்று யோசித்தவளுக்கு "அட இவங்க தானே மீனாட்சி?வாசு அண்ணாக்கு பொண்ணு கேட்டு போகும் பொது அவமானம் பன்னிட்டாங்கனு சொன்னாங்க?இப்போ இந்த ஆண்ட்டி இங்க என்ன பண்ணுது,ஏதோ தப்பா இருக்கு என்று யோசித்தால்.மறைந்து இருந்து கவனிக்கலாம் என்று மறைந்து கொண்டு மொபைலில் அவர்கள் பேசுவதை ரெகார்ட் செய்ய துவங்கினால்..

வெளிய கீதா இருப்பது தெரியாமல் கோகிலா மீனாட்சியுடன் பேசிக்கொண்டு இருந்தால்

கோகிலா :மீனாட்சி,இப்போ எதுக்கு இங்க வந்த?

மீனாட்சி :அண்ணி ,நீங்க சொன்ன மாரி நான் அணிக்கு உங்க அம்மா முன்னாடி பொண்ணு தரமுடியாதுனு பேசினேன் .நான் அன்னிக்கு பேசின பேச்சு இன்னிக்கு உங்க பையனுக்கு உங்க திட்டம்படி கல்யாணம் நடக்குது .

கோகிலா :(சந்தோஷமாக)ஆமா மீனாட்சி,நானும் எவ்வளவோ முயற்சி பண்ணேன் அனன்யாவை வாசுக்கு கட்டிவைக்க அண்ணனா பேசும்னு ,ஆனா அண்ணன் வாயே திறக்கலை .புரோக்கர் கூப்டுவாராரு ,வேற இடத்துல பொண்ணு பாக்குறாரு ,ஆனா அவர் பொண்ண கட்டிக்குடுக்குறேன் சொல்லவே இல்லையே .அதான் உன் வீட்டுக்கு பொண்ணு கேட்டுவந்து ஒரு நாடகம் போட்டேன் .நீயும் நான் சொன்னமாரியே பேசின .நீ கேட்ட கேள்வி அண்ணன் உடனே கல்யாணத்துக்கு நாள் பார்த்துருச்சு இல்லை .

மீனாட்சி :ஆமா அண்ணி ,நான் கஷ்டப்பட்ட அப்போ நீங்க தான் உதவி செஞ்சீங்க நீங்க கேட்டு நான் செய்யலைன்னா எப்புடி ?அதான் யோசிக்காம நீங்க சொன்னமாரியே செஞ்சுட்டேன்

கோகிலா :யோசிக்காம செஞ்சியா ?காசு வாங்கிட்டு தானே செஞ்ச?

மீனாட்சி :(சிரித்துக்கொண்டே )என் நிலைமை எனக்கு அண்ணி ,இப்போ நான் வந்ததும் அதுக்கு தான் .நீங்க குடுத்த காசு உங்க அப்பாக்கு மாத்திரை மாத்தி கொடுக்கவும்,வீட்டுக்கு வரப்போ அவமான படுத்தவும் காசு குடுத்தீங்க .நேத்து உங்க அப்பாக்கு மூச்சு திணறல் வரவைக்க என் பொண்ணு அதே ஆஸ்பத்திரில நர்சா இருக்கவும் , என் பொண்ணு கிட்ட சொன்னிங்களே அதுக்கு காசு குடுக்களையே ?உங்க அப்பாக்கு அப்படி ஆனதால் அங்க இருக்க டாக்டர் என்னாச்சுன்னு விசாரிக்குறாங்க .என் பொண்ணு மாட்டிக்கிட்டா என்ன பண்றது .அதான் கல்யாணத்துக்கு முன்னாடியே வந்து பேசி காசு வாங்கிட்டு போலாம்னு வந்தேன் .

மனம் ஏங்குதேWhere stories live. Discover now