CHAPTER 13

357 12 3
                                    


பூஜை சிறப்பாக முடிந்தது ,அனைவர்க்கும் பொங்கல் கொடுத்துவிட்டு மரத்தடியில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தார்கள் .அப்போ அங்கே வந்த ஒரு முதியவர் இவர்களுக்கு எதிரில் அமர்ந்தார் .கசங்கிய பழைய வேஷ்டி சட்டை ,சோர்வான தோற்றம்,அவர் முதுமையும் பசியும் அப்பட்டமாக அவர் முகத்தில் தெரிந்தது .அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை .

அவரை பார்த்த அனன்யா அங்கு இருந்த பொங்கல் பானையை பார்த்தால் இன்னும் சர்க்கரை பொங்கல் மீதி இருந்தது.பூஜையில் வைத்த பழம், பொரி,வாங்கிய புது வேஷ்டி என்று அனைத்தும் இருந்தது .இவற்றை எடுத்து கொண்டு ஒரு இலையை எடுத்து கொண்டு அந்த பெரியவரிடம் சென்று

அனன்யா : "பிரசாதம் இருக்கு சாப்பிடுறீங்களா தாத்தா "

முதியவர் ஏதும் கூறாமல் சற்று நேரம் அவள் முகம் பார்த்தார் பின்பு மெல்லிய புன்னகையுடன் சரி என்றார்

அனன்யா அவருக்கு பொங்கல் பழம் அனைத்தும் எடுத்து வைத்தால் ,அதை அவள் குடும்பத்தில் அனைவரும் நமக்கு இது தோன்றவில்லையே என்று அவளை பெருமையாக பார்த்தனர் .வாசு மட்டும் அந்த முதியவர் குடிக்க தண்ணீர் பாட்டில் எடுத்து சென்றான்.

உணவு முடித்த பெரியவரிடம் பழம் பொறி எல்லாம் ஒரு பையில் வைத்து குடுத்த அனன்யா ,

அனன்யா :தாத்தா இதுல பழம் ,பொரி ,அப்புறம் புது வேஷ்டி இருக்கு .

தாத்தா :எனக்கு எதுக்குமா?நீ சாப்பாடு கொடுத்ததே போதும்

அனன்யா :உங்க பேத்தி குடுத்தா வாங்கிக்க மாட்டேன் சொல்லுவீங்களா ?

முதியவர் :சரிம்மா குடு .சிரித்து கொண்டே பேத்தி சொன்ன கேக்காம இருக்க முடியுமா .

பையை வாங்கி கொண்டவர் வாசு அனன்யா இருவரையும் அவர் எதிரில் அமர சொன்னார்.அவர்கள் எதிரில் அமர்ந்து சிறிது நேரம் கண்ணை முடியவர் சிறு நொடி கழித்து கண் திறந்து அனனன்யாவை நோக்கி

முதியவர் :உனக்கு நல்ல மனசு,ஆனா மனசு முழுக்க பாசத்துக்கு ஏக்கம் இருக்கு.ஆனா நீ ஏங்குற பாசம் உனக்கு கிடைக்கும் பொது நீ அதை வெறுத்துவிடுவாய் ,உனக்கு கொஞ்சம் நேரம் சரி இல்லை .நீ வெளிநாட்டுல இருந்து இங்க கிளம்பினப்போவே உனக்கு இது மனசுல பட்டுஇருக்கும் .நீ எவ்ளோ ஜாக்கிரதையா இருந்தாலும் ஒரு சதி வலைல நீ விழுந்துருவ ,ஆனா விழுந்தே இருக்க மாட்டாய் ,உடனே எழுந்துடுவ.என்ன நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே னு மனசுல வச்சுக்கோ .முடிவு நல்லதாவே இருக்கும் .இந்த தாத்தா சொன்னதை நியாபகத்துல வச்சுக்கோ .எல்லாம் நல்லபடியா முடியும்.நீ கொஞ்சம் அங்க போமா நான் தம்பி கிட்ட பேசணும்

மனம் ஏங்குதேDove le storie prendono vita. Scoprilo ora