CHAPTER 6

426 13 10
                                    

அனன்யா POV

இங்க வந்து முதல் நாள் தான் ரெஸ்ட் எடுக்க முடிஞ்சுது .அடுத்து தொடர்ந்து வேலை இருந்ததே இருந்துச்சு .அவசரமா இந்தியா வந்ததால கொஞ்சம் வேலை பாக்கி இருந்துச்சு, வீட்டுல டிசைன் முடிச்சுட்டு ஒன்லைன் மீட்டிங்கில் டDISCUSSION வச்சுக்கலாம் சொல்லிட்டாங்க .ஆனா TIME DIFFRENCE ஆல்பாதி ராத்திரி முழிச்சு இருக்கவேண்டி இருந்துது .ஆனா என்ன பண்ண முடியும் ,இங்க ஒர்க் இப்படி தான் இருக்கும் .இப்போ கஷ்டப்பட்ட நல்லா பேர் மட்டும் இல்லை பெரிய ப்ரொஜெக்ட்ஸும் கிடைக்கும் .ரெண்டு நாள் சரியா தூக்கம் இல்லாம தலை வலிச்சுது .ஹால்ல அபி டிவி பார்த்துட்டு இருந்தான் ,எதிர்ல வாசு இருந்தான் ."இவன் ஏன் காலைலயே இங்க வந்து இருக்கான் "நெனச்சுட்டு அபி தோளில் சாஞ்சுகிட்டேன்.கொஞ்சநேரத்துல அத்தை வாசு கூட அவன் வீட்டுக்கு போய்ட்டாங்க ,எங்களையும் மத்தியானம் அங்க வரசொலிட்டு கிளம்பிட்டாங்க .

கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு 12மணி போல வாசு வீட்டுக்கு நான் அபி கீதா கெளம்பி போனோம் .கீதா நான் வாங்கிக்குடுத்த போன்ல கேம் விளையாடிட்டே வந்தா .அவளுக்கு நான் சின்ன TISSUE PAPERல குடுத்தா கூட அட பத்திரமா வச்சுப்பா இப்போ மொபைல் குடுத்தா கேக்கவா வேணும் .

அபிக்கு இம்போர்ட்டண்ட் கால் வந்ததால நான் தான் கார் திரிவர் பண்ணேன் .வாசு வீட்டுல கோகிலாவும் வாசுவும் ஏதோ பேசிட்டு இருந்தாங்க .நான் கார் பார்க் பண்ணிட்டு இறங்கி வராத பார்த்த கோகிலா மூஞ்சி ஒரு மாரி மாறுச்சு .நாங்க யாரும் கண்டுக்காம உள்ள போய்ட்டோம் .என்னை பார்த்த தாத்தா :ஏன்டா தினம் என்னை பார்க்க கண்டிப்பா வரேன் சொல்லிட்டு வரவேயில்லை?இந்த தாத்தாவை மறந்துட்டியானு "செல்லமா கோச்சிக்கிட்டாரு .."இல்லை தாத்தா முக்கியமான வேலை இருந்துச்சு.2 நாள் நைட் மீட்டிங் முடிச்சுட்டு சரியா கூட தூங்க முடியல .அதுனால தான் வரமுடியலை "..."சரிம்மா ஆனா உடம்ப பார்த்துக்கோ ,தூங்காம இருக்க கூடாது ,பாரு முகம் வாடி பொய் இருக்கு " ..எல்லாரும் கொஞ்ச நேரம் பேசிட்டு சாப்பிட போனோம் .

மனம் ஏங்குதேWhere stories live. Discover now