CHAPTER 5

418 17 6
                                    


வாசு POV 

அனன்யா அபியின் நெருக்கம் என்னை ஏதோ செய்தது .அவர்கள் நெருக்கம் ஏன் எனக்கு பிடிக்கவில்லை?நான் யோசித்து கொண்டு இருக்கும்போதே சித்தி வந்ந்துவிட நாங்கள் இருவரும் கிளம்பிவிட்டோம் .வீட்டிற்கு வண்டுவிட்டபோதும் எனக்கு மனம் ஒரு நிலையில் இல்லை,தனியாக இருக்கவும் விரும்பவில்லை .என் நண்பன் கோபி வீட்டிற்கு வண்டியை விட்டேன் .என்னை அந்த நேரத்தில் எதிர்பாக்காத கோபி "வா வாசு ,என்னடா மில்லுக்கு போகலையா?"என்று கேட்டான் .மறுப்பாக தலை அசைத்து விட்டு அவன் வீட்டு திண்ணையில் அமர்ந்து கொண்டேன் .கோபி வீடு சிறியதாக இருந்தாலும் பூ தோட்டம் வைத்து அழகாக இருக்கும் , வண்ண வண்ண பூக்களை பார்க்கையில் மனம் லேசாகி விடும் .வந்து பேசாமல் உட்காந்து இருந்ததை பார்த்த கோபி என் அருகில் அமர்ந்து

கோபி : "என்னடா ?ஏன் ஒரு மாரி இருக்க?உடம்பு முடியலையா?"

வாசு :அதுலாம் இல்லடா .நல்லா தான் இருக்கேன்

கோபி :என்னாச்சு சொல்லுடா ,ஒன்னும் இல்லனா என் இப்படி இருக்க ?

வாசு :என்னாச்சுன்னு எனக்கு தெரியலடா.

கோபி :என்னடா சொல்லற?கொழப்பாத தெளிவா சொல்லு மச்சான்

வாசு :தாத்தா பிறந்த நாளைக்கு எல்லாரும் வந்து இருகாங்க தெரியும்ல?

கோபி :ஆமா அது தான் எல்லாரும் வந்து 3 நாலு ஆகுதே

வாசு கண்ணன் மாமா பொண்ணு அனன்யா நியாபகம் இருக்கா?

கோபி :யாரு படிக்கச் வெளிநாடு போச்சே அந்த பொண்ணா?

வாசு :அவ தான் .அவளும் வந்து இருக்கா.

கோபி :சரிடா அதுக்கு என்ன?

வாசு :அவ வந்ததுல இருந்து என்னமோ மாரி இருக்கு.எப்போமே அவ தனியா தான் இருப்பா .அதுனால அவ கூட பழகுனது இல்லை .ஆனா இப்போ அவளை பார்த்ததுல இருந்து அவ கூட பேசணும்,பழகணும் தோணுது.அவ எங்க வீட்டுல தங்கமா செல்வி சித்தி வீட்டுக்கு போனப்போ ரொம்ப கஷ்டமா இருந்துச்சு .2 நாளா அவ வீட்டுக்கு வருவான்னு ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்துட்டேன் .இன்னிக்கு காலைலயே எடோ சாக்கு சொல்லி அவளை போக போனேன் .ஆனா அவளும் அபியும் நெருக்கமா இருக்குறத பார்த்து எனக்கு என்னமோ பண்ணுது .ஒரு மாரி மனசு கஷ்டமா இருக்கு .எனக்கு ஏன் இப்படி தோணுதுனே தெரியலடா

கோபி : டேய் என்ன மச்சான் சொல்லுற?நீ அந்த பொண்ண விரும்புரியா ?

வாசு :நீ ஏன்டா புதுசா கொழப்புற?

கோபி :நீ அப்படி சொல்லுறது அப்படி தான் இருக்கு.

வாசு---

கோபி : அவ உன் முறை பொண்ணு வாசு .ரொம்ப நாள் கழிச்சு பார்த்து இருக்க. இந்த வயசுல வர ஈர்ப்பு தான் உனக்கு வந்து இருக்கு .இதை பெருசா போட்டு கொழப்பிக்காத ..அந்த பொண்ணே எப்போவாச்சு தான் ஊருக்கு வருது .ஏதாச்சு உளறி வைக்காத ..

வாசு :நீ சொல்லுறது சரி தாண்ட .ஆனா வரும் ஈர்ப்புனு தோணல எனக்கு

கோபி :சரிடா எதுவானாலும் கொஞ்சம் time எடுத்துக்கோ ,எடுத்தோம் கவுத்தோம்னு முடிவு பண்ணாத .

வாசு :சரிடா .நீ சொல்லுறதும் சரி தான்.சரிடா நேரமாச்சு .வீட்டுக்கு போறேன் .நீயும் வாடா அம்மா உன்னை வரச்சொல்லி சொன்னாங்க.

கோபி :சரிடா சாய்ங்காலம் வரேன் .

கோபியிடம் பேசியபின் ஒரு தெளிவு வந்தது .நேராக வீட்டுக்கு சென்றேன்.



கொஞ்சம் சின்ன பதிவு தான் .I will try to do another update before 6 pm.,or i will update tomorrow as soon as possible.If u like the story or want to give your feed back please do comment ...

PLZ DO VOTE

மனம் ஏங்குதேOnde histórias criam vida. Descubra agora