CHAPTER 4

459 12 5
                                    


VASU POV

இரவு வெகுநேரம் ஆகியும் வாசுவுக்கு உறக்கம் வரவில்லை .அவளை பார்த்ததில் இருந்து வாசுவின் மனம் ஒரு நிலையில் இல்லை.அவள் கண்கள் அவன் நினைவில் மீண்டும் வந்து சென்றது .அவள் ஏன் என்னை கோவமாக பார்க்கிறாள்?அவள் இங்கு தங்கி இருந்தால் அவள் முகத்தில் விழித்து இருக்கலாமே.ஏன் அவள் இங்கு தாங்கவில்லை?அவள் குடும்பம் அனைத்தும் இங்கு இருக்க இவள் ஏன் செல்வி சித்தியுடன் சென்றால் ?பாட்டி தாத்தா தவிர்த்து யாருடனும் பேசவும் இல்லை.பாவம் அபிஷேக் தான் ,ஆசையாக அவளிடம் சென்றவனிடம் முகத்தில் அடித்தாற்போல் பேசிவிட்டால் (விட்டா அவ அடிச்சுருப்பா,நம்ம ஹீரோக்கு தெரியல அவளை பத்தி )

ஒருவேளை அம்மா சொன்னது போல குடும்பத்தின் மீது ஓட்டுதல் இல்லாமல் தான் இருக்கிறாளோ?அத்தையும் மாமாவும் என்மீது எவ்ளோ பாசம் காட்டுகிறார்கள் ,பெற்ற பிள்ளை மீது எவ்வளவு பாசம் காட்டுவார்கள் ?இவளால் எப்படி அவர்களை விட்டு இருக்கமுடிகிறது ?மாமா பாவம் இன்று அவர் முகம் வாடிவிட்டது ,அம்மா எவ்வளவு சொல்லியும் அவள் சென்றது அம்மாவுக்கும் வேதனையாகிவிட்டது.அவள் இங்கு இருந்து செல்வதற்குள் அவளை எப்படியாவது சரியாக்கிட வேண்டும் .அதற்கு முதல் அவள் இங்கு இருக்கவேண்டும்.அதற்கான வேலைகளை நாளை காலை முதலே செய்யவேண்டும்,இப்பொது தூங்குவோம் .

காலை அழகாக விடிய ,வாசு வேகமாக குளித்து வெளியே கிளம்ப தயாராகி வர,

கோகிலா :"சாப்பிடாம எங்கட போற?இரு சாப்பாடு ஆகிடுச்சு சாப்பிட்டு போ"

வாசு :சரிம்மா நீ எடுத்து வை நான் சாப்பிட வரேன் .

பாட்டி :வாசு இன்னிக்கு செஞ்ச பலகாரம் எடுத்துட்டு போய் செல்வி வீட்டுல குடுத்துட்டு வரியா?பசங்க ரெண்டும் வெளிநாட்டுல இருந்து வந்ததுல சோர்வா இருக்குங்க .நல்லா சாப்பிட்டு ஒய்வு எடுக்கட்டும்.

கோகிலா :சரிம்மா ,வாசு சாப்பிட்டு சுட இருக்கப்போவே கொண்டு குடுத்துரு.

மனம் ஏங்குதேWhere stories live. Discover now