CHAPTER 22

283 11 4
                                    


அனன்யாவுடன் சென்ற மகேஷ் குடும்பத்தினர் ஒரு மணி நேரம் கழித்து தான் வக்கீலுடன் வெளியே வந்தார்கள்."கல்யாணம் தேதி முடிவு பண்ணதும் சொல்லுங்க அனன்யா" என்று சொல்லி விட்டு சென்றார் வக்கீல்.யாரும் ஏதும் பேசாமல் இருந்தார்கள் .தலை வலி என்று வள்ளியிடம் தேனீர் கொண்டு வர சொல்லிவிட்டு ஹாலில் இருந்தால் அனன்யா.பூஜை அறையில் இருந்து வந்த பாட்டி "கண்ணா,நாளை மறுநாள் நல்ல நாள் தான் ,அன்னிக்கு கல்யாணம் வச்சுக்கலாமா?"என்றார் ."சரிம்மா ,நாளைக்கு தேவையான எல்லா ஏற்பாடும் செஞ்சுறலாம் "என்றார் கண்ணன் .

சீதா பாட்டி :ஊர் தலைவர் கிட்ட சொல்லிரனும்,நாளைக்கு அனன்யா வாசு ரெண்டு பேருக்கும் துணி ,நகை எடுக்கணும்,

கண்ணன் :சரிம்மா எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு ,ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு கூட பேசியாச்சு .எல்லாம் தயாரா இருக்கு

"ரெஜிஸ்டர் ஆபிஸ் "என்றதும் வாசு "ரெஜிஸ்டர் ஆபிஸ்எதுக்கு?"என்றான்.அதற்கு கண்ணன் பதில் சொல்லும் முன் "எல்லாம் என் மேல இருக்க நம்பிக்கை மாமா"என்று கூறினால் அனன்யா.

கண்ணன் :ஆமா அனன்யா உன்மேல நம்பிக்கை அவ்ளோதான் இருக்கு

அனன்யா :ஆனா எனக்கு உங்கமேல அந்த அளவு நம்பிக்கை கூட இல்ல ,,கவலை படாதீங்க..

வாசு :அனன்யா மேல நம்பிக்கை இல்லை சரி என்மேல நம்பிக்கை இருக்கா?

கண்ணன் :உன் மேல இல்லாத நம்பிக்கையா வாசு?

வாசு :சரி அப்போ அனன்யா பாஸ்போர்ட் திருப்பி குடுங்க

பவானி :கல்யாணம் முடிஞ்சதும் பார்த்துக்கலாம் வாசு .இனிமேல் அவளுக்கு எதுக்கு பாஸ்போர்ட்

அனன்யா :நீங்களா திருப்பி குடுத்தா நல்லது இல்லைனா போலீஸ் கம்பளைண்ட் ஆகும் பராயில்லையா ?

பவானி எங்கேயாச்சு அம்மா கிட்ட பேசுற மாரி பேசுறியா?நீயெல்லாம் எப்படி எனக்கு பொறந்த?

அனன்யா :அந்த சந்தேகம் எனக்கும் இருக்கு .நீங்களும் எப்படி அம்மா னு வெளிய சொல்லிக்குறீங்க?

மனம் ஏங்குதேWhere stories live. Discover now