9 அம்மாவின் அறிவுரை

2.5K 108 20
                                    

9 அம்மாவின் அறிவுரை

மாலை

கமலியை அழைத்து செல்ல, சமயபுரத்தை அடுத்துள்ள  மாகாளியம்மன் குடியில் இருக்கும் அவளுடைய அம்மா வீட்டிற்கு வந்தான் ஆதித்யா. அவனை அமரச் செய்துவிட்டு, அவனுக்கு காபி கொண்டு வர உள்ளே சென்றார் செல்வி. அவளது அறையிலிருந்த கமலியை அழைத்தார் சுந்தரி. வெளியே வந்த கமலியை பார்த்து புன்னகை புரிந்தான் ஆதித்யா. தானும் அவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு,

"அம்மா எங்க அத்தை?" என்றாள் கமலி.

"தம்பிக்கு காபி போடுறாங்க"

அதைக் கேட்டு பதட்டமடைந்த கமலி, சமையலறையை நோக்கி ஓடினாள். அதைப் பார்த்து புரியாமல் விழித்தார் சுந்தரி. ஆதித்யாவுக்காக கலந்த காபியில், சர்க்கரை போட போன செல்வியின் கரத்தை பற்றினாள் கமலி.

"என்ன ஆச்சு கமலி?"

"ஆதிஜி ரத்தத்துல நிறைய சக்கரை இருக்காம். அதனால அவர் சர்க்கரை சாப்பிட கூடாது" என்றாள்.

சர்க்கரை கலக்காத காபியை செல்வியின் கையில் கொடுத்துவிட்டு, அவரை பின்தொடர்ந்து வந்தாள் கமலி. அந்தக் காபியை ஆதித்யாவிடம் கொடுத்தார் செல்வி. சர்க்கரையில்லாத காப்பியை குடித்த ஆதித்யாவின் கண்கள், அனிச்சையாய் கமலியின் பக்கம் திரும்பியது.

"நீங்க சர்க்கரை சாப்பிட கூடாதுன்னு கமலி சொன்னா. அதனால தான் தம்பி சக்கரை போடல" என்றார் செல்வி.

அவர் கூறுவதற்கு முன்பாகவே அதை புரிந்துகொண்ட ஆதித்யா, தலையசைத்து புன்னகை புரிந்தான்.

"நாங்க நாளைக்கு இங்கிருந்து கிளம்பறோம். உங்களுக்காக நாங்க காத்திருப்போம். வீடு ஷிஃப்ட் பண்ற வேலையை பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம். அதெல்லாம் நான் பாத்துக்குறேன். நீங்க சென்னைக்கு வந்தா போதும்"

"சரிங்க தம்பி"

"சீக்கிரம் சென்னைக்கு வர முயற்சி பண்ணுங்க"

"சரிங்க தம்பி" என்றார் சுந்தரி

காபி தம்ளரை கீழே வைத்துவிட்டு எழுந்து நின்றான் ஆதித்யா. தான் செய்து வைத்த பலகாரங்களை கமலியிடம் கொடுத்தார் செல்வி. கமலி அழ துவங்கும் முன், அவளை மெல்ல அணைத்துக்கொண்டு ரகசியம் உரைத்தார் செல்வி.

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Dove le storie prendono vita. Scoprilo ora