29 நம்பிக்கை

2.1K 102 18
                                    

29 நம்பிக்கை

அனைவரும் அமர்ந்து, தொலைக்காட்சிப் பெட்டியில் ஒரு திரைப்பட காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார்கள். தான் சமைத்த சுழியனை அனைவருக்கும் கொடுத்துக்கொண்டிருந்தாள் கமலி. அங்கு வந்த ராகுல், இந்திராணியின் கையில் இருந்த ரிமோட்டை பிடுங்கி, ஒவ்வொரு சேனலாக மாற்றினான்.

"ரொம்ப சூப்பரா இருக்கு" என்றார் இந்திராணி அந்த சுழியனை சுவைத்தவாறு.

"ஆமாம் கமலி, ரொம்ப நல்லா செஞ்சிருக்க" என்றார் பாட்டி.

அப்போது, ராகுல் *செய்தி* சேனலுக்கு தாவினான். அதில் *கும்பமேளா* பற்றிய செய்தி ஓடிக்கொண்டிருந்தது. உடனடியாக அதை மாற்றினான் ராகுல்.

"ப்ளீஸ், ப்ளீஸ் அந்த நியூஸை வையுங்களேன். எனக்கு கும்பமேளாவுக்கு போகணும்னு ரொம்ப ஆசை." என்றாள் கமலி.

அங்கிருந்த அனைவரும் அமைதியாகிப் போனார்கள். அனைவரது பார்வையும் இந்திராணியின் மீது குவிந்து நின்றது. அவரது கண்கள் கலங்கிப் போயிருந்தது. பொங்கி வந்த அழுகையை அடக்கியவாறு அங்கிருந்து ஓடிப் போனார் இந்திராணி. சித்தப்பா புஷ்பராஜும் அவரை பின் தொடர்ந்து சென்றார். அவர் அழுததை பார்த்த கமலிக்கு ஒன்றும் புரியவில்லை. இந்திராணி அழுவதை அவள் பார்ப்பது இது தான் முதல் முறை. அவர் எப்போதும் சந்தோஷமாய் இருக்கும் நபராயிற்றே. திடீரென்று அவருக்கு என்னவானது? அனைவரும் தத்தம் அறைகளுக்கு கலைந்து சென்றார்கள்.

கும்பமேளா பற்றிய செய்தி ஓடிக்கொண்டிருந்த சேனலை மாற்றி விட்டு, ரிமோட்டை அவளிடம் கொடுத்தான் ராகுல். அவனும் அங்கிருந்து செல்ல எத்தனித்த போது, அவனை தடுத்தாள் கமலி.

"என்ன ஆச்சு ராகுல்? எதுக்காக அத்தை அழறாங்க?"

"இந்த நியூஸ் தான் அதுக்கு காரணம், அண்ணி"

"இந்த நியூஸா? இதுல அழறத்துக்கு என்ன இருக்கு?"

"எங்க வாழ்க்கையோட ரொம்ப பெரிய சோகம், கும்பமேளாவில் தான் நடந்தது அண்ணி"

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Where stories live. Discover now