15 பொய்

2.1K 100 18
                                    

15 பொய்

ஒரு மாதத்திற்கு பின்

முகேஷ் வில்லா

தன் அருகில் யாரோ நிற்பதை உணர்ந்து, தலையை உயர்த்தினார் முகேஷ். அவரது மகள் ஷில்பா, அவரை நோக்கி சில காகிதங்களை நீட்டியவாறு அவர் முன் நின்றிருந்தாள். 
நாம் ஏற்கனவே சுவிட்சர்லாந்தில் சந்தித்த பெண் தான் அவள்.

"என்ன இது?" என்றார் முகேஷ்.

"நான் பிஎச்டி சைக்காலஜி படிக்கலாம்னு இருக்கேன் பா. இது, அதுக்கான அப்ளிகேஷன். சைன் பண்ணுங்க."

அவளிடமிருந்து அதைப் பெற்று, கையொப்பமிட்டார் முகேஷ்.

"உன்னுடைய இந்த முடிவு, எனக்கு ரொம்ப சந்தோஷத்தை தருது. உனக்கும் மைண்ட் டைவர்ஷன் தேவை. நீ ஆதித்யாவை மறந்துட்டு பழையபடி சந்தோஷமா இருக்கணும்."

சரி என்று தலையை அசைத்தாள் ஷில்பா.

"நீ விருப்பப்பட்டா, லண்டனில் படிக்க நான் ஏற்பாடு செய்றேன்"

"இல்லப்பா, உங்களை தனியா விட்டுட்டு போக நான் விரும்பல"

தன் மகளின் வார்த்தையை கேட்டு நெகிழ்ந்தார் முகேஷ்.

"எனக்கு ரொம்ப சந்தோஷம். ஆனா, நீ ஆசைப்பட்டதை நிறைவேற்ற முடியலன்னு வருத்தமாவும் இருக்கு..."

"அதையெல்லாம் மறந்துடுங்கப்பா. நான் அதைப் பத்தி நினைக்க விரும்பல"

நிம்மதியுடன் தலையசைத்தார் முகேஷ். ஆசீர்வதிக்கும் வகையில், அவள் தலையை தொட்டு, வருத்தத்துடன் அங்கிருந்து சென்றார். தன் கையிலிருந்த விண்ணப்பப்படிவத்தை துஷ்ட புன்னகையுடன் பார்த்தாள் ஷில்பா.

"ஐ அம் சாரி பா. நான் உங்களை ஏமாத்திட்டேன்... ஏன்னா, நான் ஏமாற விரும்பல... நான் விருப்பப்பட்டதை, பரவாயில்லை போகட்டும்னு என்னால விட்டுட முடியாது. நான் ஒரு சைக்காலஜி ஸ்டூடன்ட். யாரை, எப்படி, எங்க அடிக்கணும்னு எனக்கு தெரியும்." என்று மனதில் எண்ணினாள் ஷில்பா.

அமைதியகம்

ஆதித்யா தினமும் வீட்டிற்கு சீக்கிரம் வருவதை வழக்கமாக்கி கொண்டுவிட்டதை பார்த்து, அமைதியகத்தில் இருந்தவர்கள் சந்தோஷமடைந்தார்கள். இந்த ஒரு மாத காலத்தில், கமலியிடம் படிப்படியான முன்னேற்றத்தை அனைவரும் கண்கூடாய் கண்டார்கள். அவளது நடவடிக்கைகளில் தன்னம்பிக்கை தெரிந்தது. தான் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பில் கற்றுக் கொண்ட ஆங்கில வார்த்தைகளை, பேச்சுக்கு ஊடாக சரளமாய் பயன்படுத்த துவங்கினாள் கமலி. அவளுக்கு உதவுகிறேன் என்ற பெயரில், அவளிடம் தப்பும் தவறுமாய் ஆங்கிலத்தில் இந்திராணி பேசத் துவங்க, அது ஆதித்யாவிற்கு கவலையை அளித்தது. அது கமலியை குழப்பி விடலாம் அல்லவா...?  ஆனால் அவனுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில், இந்திராணி பேசிய தவறான ஆங்கிலத்தை, சரி செய்து அவருக்கு சரியாய் சொல்லிக் கொடுத்தாள் கமலி.

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Where stories live. Discover now