57 ஒரே காரணம்

2K 108 21
                                    

57 ஒரே காரணம்

ஷாலினியை அனாதை இல்லத்தில் பார்த்த கமலி உறைந்து போனாள். என்ன ஆனது அவளுக்கு? அவள் எப்படி இங்கு வந்தாள்? சரவணனும் ரேணுகாவும் எங்கே போனார்கள்?
ஷாலினியின் பரிதாபமான நிலையை பார்த்து, கமலியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. கண்ணீர் சிந்தியபடி அவள் கன்னத்தை தட்டினாள்.

"ஷாலு... ஷாலு கண்ணை திறந்து என்னை பாரு"

"உங்களுக்கு இவளைத் தெரியுமா அக்கா?" என்றாள் அவளை அழைத்து வந்த சின்ன பெண்.

"இவ எங்க வீட்டு பொண்ணு. இவ எப்படி இங்க வந்தா? யார் இவளை இங்க கூட்டிக்கிட்டு வந்தது?"

"இவ போன மாசம் தான் இங்க வந்தா. அவளோட அம்மாவும் இங்க தான் இருக்காங்க"

"என்னது..??? அவங்க அம்மாவும் இங்கே இருக்காங்களா? எங்க?"

"அவங்க சமையலறையில் இருப்பாங்க. அவங்க இங்க சமையல் வேலை செய்றாங்க."

அப்போது மெல்ல கண் திறந்தாள் ஷாலினி.

"ஷாலு..."

ஷாலினி, கமலியை அடையாளம் கண்டுகொண்டாள்.

"மாமி" என்று பலவீனமான குரலில் அழைத்து அவளை கட்டிக்கொண்டு அழுதாள் ஷாலினி.

"நீங்க வந்துட்டீங்களா மாமி... என்னை வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போக வந்தீங்களா?"

ஆமாம் என்று தலையசைத்த கமலி, அழுதபடி அவள் கண்ணத்தில் முத்தமிட்டாள். அவளைத் தன் தோளில் தூக்கிக்கொண்டு வெளியே வந்தாள். மயூரியும் லாவண்யாவும் ஷாலினியை பார்த்து... அவளது மோசமான நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்கள் இருவரும் கமலியை நோக்கி ஓடினார்கள், அவர்கள் பார்த்துக் கொண்டிருப்பது உண்மை தான் என்பதை ஊர்ஜிதம் செய்துகொள்ள.

"சமீர், டாக்டரை கூப்பிடு. இவளுக்கு ஜுரம் கொதிக்குது..."

"இதோ கூப்பிடுறேன்" என்று கூறிவிட்டு அலுவலகத்தை நோக்கி ஓடினான் சமீர்.

சில நிமிடத்தில் மருத்துவர் அங்கு வந்து சேர்ந்தார். ஷாலினியை பரிசோதித்துவிட்டு அவளுக்கு ஊசி போட்டார். அப்போது பயத்தில் கண்ணை மூடிக்கொண்டாள் கமலி. ஷாலினியோ அமைதியாய் இருந்தாள்.

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Where stories live. Discover now