34 மலர்க்கணைகள்...

2.1K 103 10
                                    

34 மலர்க்கணைகள் பாய்ந்துவிட்டால்...

அமைதியகம்

ஆதித்யா கூறியதை நினைத்தபடி வரவேற்பறையில் அமர்ந்திருந்தாள் கமலி. அது என்னவாக இருக்கும்? மற்றவர்களின் உள்ளுணர்வை எப்படி தெரிந்து கொள்வது? அவள் அமைதியாய் அமர்ந்திருந்ததை பார்த்த ஷாலினி,

"என்ன ஆச்சு, மாமி? ஏன் டல்லா இருக்கீங்க?" என்றாள்.

"இல்லையே... நான் நல்லா தானே இருக்கேன்..."

"பாத்தா அப்படி தெரியலையே..."

"அப்படியா சொல்ற? நான் நல்லா தான் இருக்கேன்னு உன்னை நம்ப வைக்க என்ன செய்யணும்?"

"கண்ணாமூச்சி விளையாடலாமா?"

"விளையாடலாமே... போய் ஒளிஞ்சிக்கோ. நான் உன்னை கண்டு பிடிக்கிறேன்."

கமலி கண்களை மூடிக்கொள்ள,   அங்கிருந்து ஒளிந்து கொள்ள இடம் தேடி ஓடிச் சென்றாள் ஷாலினி. சமையலறையில் ஒளிந்து கொண்டிருந்த ஷாலினியை சுலபமாய் கண்டுபிடித்துவிட்டு, கைகொட்டி சிரித்தாள் கமலி.

"மாட்டிக்கிட்டியா...?"

ஆமாம் என்று சோகமாய் தலையசைத்தாள் ஷாலினி.

இதற்கிடையில்...

தனது மனைவியின் *புடவை தரிசனத்திற்காக* வீடு வந்து சேர்ந்தான் ஆதித்யா. காலையில், தான் மந்திரித்து விட்ட கோழியைப் போல் ஆனதை எண்ணி பார்த்தான். இப்பொழுது, அது போல்  ஆகிவிடக்கூடாது என்று மனதை திடப்படுத்திக் கொண்டு வந்தான் அவன்.

இப்பொழுது, ஒளிந்து கொள்ள வேண்டியது கமலியின் முறை. கண்ணை மூடி எண்ணத் தொடங்கினாள் ஷாலினி. ஆதித்யா வீட்டிற்கு வந்துவிட்டது தெரியாத கமலி, ஒளிந்துகொள்ள தங்கள் அறைக்கு ஓடினாள்.

நேராக தன் அறைக்கு வந்த ஆதித்யா, தான் அணிந்திருந்த கோட்டை கழட்டி சோபாவின் மீது வீசினான். அப்பொழுது, கமலி பதட்டத்துடன் ஓடி வருவதை பார்த்த அவன், அவள் இன்னும் புடவையில் இருந்ததை பார்த்து செயலிழந்து நின்றான். ஏன் இந்தப் பெண் புடவையில் இவ்வளவு வித்தியாசமாய் இருக்கிறாள், என்று எண்ணியபடி. அவனைப் பார்த்து கமலியும் சில நொடி கூட திகைத்து நின்றாள். பிறகு ஒளிந்து கொள்ள இடம் தேடினாள். அவள் கண்ணாமூச்சி விளையாடி கொண்டிருப்பது தெரியாத  ஆதித்யா, அவள் நிலை கொள்ளாமல் தவித்ததைப் பார்த்து பதட்டம் அடைந்தான்.

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Where stories live. Discover now