38 தொலைந்த மகள்

2K 106 16
                                    

38 தொலைந்த மகள் 

மறுநாள் காலை

முதலில் கண் விழித்தது ஆதித்யா தான். அவனது கழுத்தை சுற்றி வளைத்துக் கொண்டு அவன் தோளில் கமலியும், கமலின் தலையின் மீது கன்னம் பதித்து அவனும் உறங்கிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். சிறிது நேரம் எடுத்துக் கொண்டு, அவள் தன் தோளில் சாய்ந்து உறங்குவதை பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யா. புன்னகையுடன் தான்...

சிறிது நேரத்தில், தன் தலையை அழுத்திப் பிடித்தவாறு கண்விழித்தாள் கமலி. அவர்கள் அமர்ந்திருந்த நிலையை பார்த்து அவள் திகைப்படைந்தாள்  என்று கூறத் தேவையில்லை.

"ஆதிஜி... நம்ம இப்படித் தான் தூங்கினோமா?" என்றாள் திக்கி திணறி.

ஆமாம் என்று தலையசைத்தான் ஆதித்யா.

"ஆனா ஏன்? "

"நேத்து சாயங்காலம் நீ என்ன குடிச்சேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?"

நேற்று நடந்தவற்றை நினைவுபடுத்திப் பார்த்த கமலி,

"டான்ஸிங் ஜூஸ்..." என்றாள்.

"அது வேற ஒண்ணுமில்ல... ரெட் ஒயின் தான்"

"என்ன்ன்ன்னது....?" அதிர்ந்தாள் கமலி.

ஆமாம் என்று சாவகாசமாய் தலையசைத்தான் ஆதித்யா.

"அப்படின்னா நான் குடிச்சது சாராயமா?" என்றாள் அதிர்ச்சியுடன்.

களுக்கென்று சிரித்த ஆதித்யா,

"கிட்டத்தட்ட அப்படித் தான்" என்றான்.

தன் கைகளைக் கூப்பியவள்,

"மகமாயி என்னை மன்னிச்சிடுங்க... ஆதிஜி, நீங்களும் தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க. நான் எல்லார்கிட்டயும் போய் இந்த தப்புக்காக மன்னிப்பு கேட்கணும்"

"தேவையில்ல..."

"ஆனா, அவங்க..."

 அவள் பேச்சை துண்டித்து,

"அவங்க யாருக்கும் நீ செஞ்ச *அட்டூழியம்* தெரியாது" என்றான் கிணடலாய்.

"அட்டூழியமா?" என்று மென்று விழுங்கினாள் கமலி.

தன் புருவங்களை உயர்த்தி ஆமாம் என்று தலையசைத்தான் ஆதித்யா.

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Where stories live. Discover now