17 கமலியின் சொந்த விதி

2.1K 105 26
                                    

17 கமலியின் சொந்த விதி

உறங்கிக்கொண்டிருந்த ஆதித்யாவை அவனது கைபேசியின் அலறல் சத்தம் எழுப்பியது. கண்களை கசக்கிவிட்டு அந்த அழைப்பை ஏற்றான் ஆதித்யா. அதில் பிரபாகரனின் பெயர் ஒளிந்திருந்ததை பார்த்து, தன் கண்களை சுழற்றினான்.

"சொல்ல்ல்லு..." என்றான்.

"குட் மார்னிங் ஆதி"

"குட் மார்னிங்"

"நீ எட்டு மணிக்கு ஆஃபீஸ்ல இருக்கணும். நேத்து பாதியில விட்டுட்டு போன மீட்டிங்கை கன்டினியூ பண்ண..."

"சரி வரேன்"

அழைப்பை துண்டித்த ஆதித்யாவின் கண்கள், தன் மனைவி உறங்கிக் கொண்டிருந்த அழகிய காட்சியில் நிலைத்தது. அவனது இதழ்கள் புன்னகையுடன் விரிந்தன. அவள் முகத்தில் கலைந்து விழுந்த கூந்தலை மெல்ல ஒதுக்கி விட்டான் ஆதித்யா. தன் கைகளைக் கட்டிக்கொண்டு, முதல் நாள் அவர்களுக்கு இடையில் நிகழ்ந்த உரையாடல்களை நினைத்து பார்த்தான்.

திடீரென்று அவளுக்கு என்ன ஆனது? வழக்கமாய் கமலி பேசும் பேச்சுக்கு நேர்மாறாக அல்லவா அவள் பேசினாள்...! ஒரு விதத்தில் அவனுக்கு அது சந்தோஷம் தான்... இதுவரை அவளுக்கு புரியாத ஏதோ ஒன்று அவளுக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது.

அப்போது, கமலி அசைவதை கவனித்தான். தனது கரங்களை ஒன்றோடொன்று தேய்த்து, அவற்றை சேர்த்துவைத்து பார்த்தபடி ஒரு மந்திரத்தை உச்சரித்து முடித்து,

"மகமாயி, எல்லாரையும் சந்தோஷமா வையுங்க" என்றாள்.

அதைக் கேட்டு புன்னகைத்தான் ஆதித்யா. கட்டிலை விட்டு இறங்கிய கமலி, விருவிருவென குளியலறை நோக்கி நடந்தாள். தன் கைகளை முறுக்கிவிட்டு எழுந்து அமர்ந்தான் ஆதித்யா. அவன் சீக்கிரம் அலுவலகத்திற்கு சென்றுவிட்டால் கமலி எப்படி கல்லூரிக்கு செல்வாள்? ஓட்டுனர் இளவரசனும் இல்லை. அவர் ரேணுகாவையும் இந்திராணியையும் ஒரு புதுமனை புகுவிழாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். தீபக்கும் ஒரு சைட்டைப் பார்வையிட செல்கிறான்.

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Where stories live. Discover now