மயில் ஒன்று கண்டேன்

44 4 4
                                    

அலுவலகத்தில் பட்டாம்பூச்சியாய் சுற்றி கொண்டிருந்த அலர், வழக்கத்தை விட மிகவும் ஆனந்தமாய் இருந்தாள். அவளது வேலையிடத்து அலைபேசி அழைத்தது. அழைப்பில் அவள் கேட்ட செய்தி அவளை மிரள வைத்தது. 

உடனடியாக அவளுக்கு கீழ் வேலை செய்யும் நால்வரையும் அழைத்தாள். "புதுசா ஒரு நுண்ணுயிர் நோய் பரவுது, அது தீவிரவாத செயலா இருக்கும் னு சந்தேக பட்றாங்க, சரியான விவரம் இல்லாம, ஏற்கனே ஒரு 20 பேர் இதனால பாதிக்க பட்ருக்காங்க, பாதிக்கப்பட்ட மக்களோட  பிளட் ரிப்போர்ட் எல்லாம் கலெக்ட் பண்ணுங்க, முக்கியமா அவங்க கடந்த 2 மாசமா எங்க லாம் போயிட்டு வந்தாங்க னு விசாரிங்க, நான் அந்த கிராமத்துக்கு போயிட்டு வரேன். " என்று விட்டு முத்து க்கு அழைத்தாள். "என்னங்க புதுசா ஏதும் வேல இருக்கா உங்களுக்கு, என்னோட புது கேஸ் கு கூட வரிங்களா?" என்றாள். "வள்ளி இருக்கும் இடம் எல்லாம் இந்த வேலன் இருப்பான், " என்று கூறி 10 நிமிடத்தில் கார் உடன் தயராக நின்றான்.

மூன்று நாட்கள் தொடர்ந்து விசாரித்ததில், சில முக்கிய விஷயங்களை தெரிந்து கொண்டாள். அந்த நோய் ஒருத்தர் இடம் இருந்து இன்னொரு மனிதர் க்கு பரவிருக்கு, 20 பேரில் ஒருத்தர் மட்டும் தான் அடிக்கடி சென்னை கு வந்து போயிருக்கார், அவர்க்கு சமீப காலமா கைல பணப்புழக்கம் அதிகமா இருந்துருக்கு. இது வரை பரவிய 20 பேர்ல 15 பேர் இறந்தாச்சு. முதல் 5 நாள் சாதாரமான காய்ச்சல் இருந்துருக்கு, அனால் அது 6வது  நாள்  கடுமையாக காய்ச்சல் கொண்டு உதடு எல்லாம் கருப்பாக மாறி, அவர்களது ரத்தத்தில் இருந்த சிவப்பணுக்கள் எல்லாம் அழிந்து இறந்து போகிறார்கள். இந்த நோய்க்கான நுண்ணுயிர் நம் சிவப்பணுக்களில் இருக்கும் ஹீமோகுளோபின் என்னும் ஒன்றை அழிக்கிறது. ஹீமோகுளோபின் தான் நமது இதயத்தில் இருந்து ஆக்சிஜென் ஐ உடம்பின் எல்லா பகுதிக்கும் தருவது. 

இந்த நுண்ணுயிரை எவ்வாறு பரவுகின்றது என்று அறிய முடியவில்லை. புது ரத்தம் ஏற்றினாலும் ஒரு நாளுக்கு மேல் அவர்களது உயிரை காப்பாற்ற முடிவதில்லை. அந்த கிராமத்தில் மேலும் புதிதாக 5 பேர்க்கு பரவி உள்ளது, ஊருக்குள் தடை உத்தரவு போட பட்டுள்ளது. காய்ச்சல் உள்ளவர்களை தனிமை படுத்தி வைத்து பரிசோதனை நடக்கிறது...

நடனமாடும் புதிர்Where stories live. Discover now