இறுதி அத்தியாயம்

60 4 10
                                    

அவனை கவனிக்காது, முழு கவனமும் நடனத்தில் ஒன்றி ஆடி கொண்டிருந்தவள், சிந்தையில் பலம் இருப்பினும் அவள் உடலில் பலம் இல்லை.  அவள் வேகம் குறைவதை அறிந்து அவன் அருகில் வரவும் அவள் மயங்கி விழாவும் சரியாய் இருந்தது. அவளை கையில் ஏந்தியவன், அவள் படுக்கைறையில் படுக்க வைத்தான், முகத்தில் தண்ணீர் தெளிக்க விழித்தாள் சில நிமிடங்களில். "மாமா," என்றாள் அவனை கண்டதும். 

ஜன்னல் வழி வந்த காற்று அந்த அறைக்கு குளிரூட்டியது. அவன் அவள் அருகில் வந்து அமர்ந்ததும், எழுந்து அமர்ந்தாள். "சாப்டியா?" என்றான். "இல்லங்க , நீங்க எல்லாரும் வருவீங்க னு.."என்று இழுத்தாள். "தப்பு மயூரி, இப்படி வெறும் வயிர்ல  சுத்தி சுழண்டு ஆடினா இப்படி தான் மயங்கி விழுவ, வா சாப்பிட போலாம்." என்று அவள் கரம் பற்றினான். "கொஞ்ச நேரம்ங்க , ஒரு மாறி இருக்கு" என்று எழ மறுத்தாள். "சாப்பிட்டு வந்து படுத்துக்கோ" என்றான் திகழன்.பற்றி இருந்த அவன் கரத்தை கொண்டு அவனை இன்னும் அருகில் அழைத்தாள். அவன் நெருங்கி அமர்ந்ததும் அவனை அணைத்து கொண்டாள். 

திகழன் கண்மூடி அமைதியாக அவர்களின் நெருக்கத்தை ரசித்தான். "நீயே வந்த இப்படி நெருக்கமா இருக்கலாம், நான் கிட்ட வந்தா மட்டும் ஏன் டி அவளோ பயம் வருது உனக்கு?" என்றான் கண்களை திறக்காமல். அவன் பேசியதும் அவன் கைகளில் இருந்து வெளியேற பார்த்தவளை மீண்டும் கைவளைவிற்குள் கொண்டு வந்தவன், "பதில் சொல்ல சொன்னேன், மறுபடி பயப்பட சொல்லல." என்றான். "அது என்னவோ தெரியல" என்றாள் சன்னமான குரலில்."இப்படியே இருந்துடலாம் னு தோணுது டா  தங்கம்"என்றான். எதிரில் இருந்த ஜன்னலின் காற்றிற்கு அசையும் அவள் கூந்தலை கைகளில் கோதி அதை அழுந்த முத்தமிட்டவாறு கண்களை திறந்தான். அப்போது தான் கவனித்தான், சிவப்பு நிற புள்ளி ஒன்று ஜன்னல் வழி மயூரியின் முதுகில் குறி வைத்து இருந்தது. அவன் சுதாரித்து அவளை நகர்த்த முயல குண்டு அவள் தோளில் பாய்ந்து வெளியேறியது. "மயூரி" என்று கத்தினான். ஆனால் குண்டு பாய்ந்த நொடியில் மயங்கியவள் அவன்  குரலுக்கு எழ வில்லை. 

நடனமாடும் புதிர்Where stories live. Discover now