கன்னத்து சிவப்பும் குறுஞ்சிரிப்பும்

42 4 3
                                    

அவள் கன்னத்தில் வைத்த முத்தத்தின் ஈரத்தை வருடி கொண்டான். அலரை அவள் தந்தையுடன் விட்டுவிட்டு அவன் மட்டும் அலரின் கிராமத்தில் இருந்து சென்னைக்கு பஸ்சில் பயணப்பட்டான். நண்பர்களும் அவர்கள் பக்க வேலையை விரைவில் முடித்து தன்னுடன் இணைந்து விடுவார்கள் என்று காலையில் கேட்ட செய்தி ஒரு புறம் அவனை உற்சாகமாக செயல்பட வைத்தது. பேருந்து நடத்துனர், "தம்பி நீங்க பரமேஸ்வரன் வீட்டு மாப்பிள்ளை தான" என்றார். "ஆமா அண்ணா" என்றான். திடிரென்று எதோ யோசித்தவன், "அண்ணா, மனோவை உங்களுக்கு தெரியுமா?" என்றான். "தெரியும் பா, அந்த பாவி தான் வியாதிய ஊருக்கு பரப்பினான்." என்றார். "அண்ணா, ஒரு சின்ன உதவி. மனோ அடிக்கடி சென்னை வந்துருக்கான், அவன் எந்த ஸ்டாப்பிங் லஇறங்குவான்?" என்றான் . அவன் எப்பயும் பெருங்களத்தூர் ல தான் இறங்குவான் தம்பி" என்றார்.

அலர் அங்கு இருந்த பொது மருத்துவமனையில் அமர்ந்து இருந்தாள். தந்தைக்கு 12 மணி நேரத்துக்கு ஒரு முறை ஊசி போடுவதை சரியாக கண்காணித்தாள். தந்தை தேறி வருவதை கண்டாள். நிரந்தர தீர்வுக்கு மனம் ஏங்கியது. நாளை மறுபடியும் திரும்ப வேண்டும். அவன் சென்று அரைமணிநேரம் கூட ஆகவில்லை, ஆனால் அவனது அருகாமையை வேண்டியது அவள் விரல்கள். அழைத்தாள் அவனுக்கு, ஜன்னலோர இருக்கை அவனையும் அவளை எண்ணிட வைத்தது. அவன் நினைத்த நொடி அவள் அழைப்பு வந்தது. 

" அப்பா எப்பிடி இருக்கார், "எடுத்தவுடன் பதறி கேட்டான்,

"அப்பாக்கு ஒன்னும் இல்ல, அப்பா நல்லா இருக்கார். நான் தான் நல்லா இல்லை. " என்றாள். 

"என்னாச்சு என் வள்ளிக்கு" என்றான்.

"வேல் இல்லாமல் வள்ளி முழுசா இல்ல. வள்ளியின் பாதி வேலோட பஸ் ல போயிட்டு இருக்கு" என்றாள். 

"இப்படியெல்லாம் பேசினா, நான் திரும்ப வந்துருவேன் டி." என்றான்.

"ஒன்னும் வேணாம், நம்ம ஆளுங்க சென்னை ல தான் இருகாங்க போல, எப்ப தான் வேலைய முடிக்க போறாங்க அவங்க?" என்றாள்.

நடனமாடும் புதிர்Where stories live. Discover now