நடனமாடும் புதிர்

40 3 2
                                    

தயாளு அம்மாள் முகத்தை மாற்றி கொண்டு,"ஒன்னும் இல்லங்க, நம்ம திகழனுக்கும், தாராக்கும் திருமணம் முடிவு பன்னிருந்தோம், அதான் தேதி பாத்தேன், வாங்க நாம கிளம்பலாம், பசங்க காத்திருப்பாங்க" என்றார். "கல்யாணம் எப்போ?" என்றார் ஆர்வமாக, "அடுத்த வாரம் புதன் கிழமை" என்ற தயாளுஅம்மாளின் கரங்களை பற்றி கொண்டார் சிவராமன். "ரொம்ப சந்தோசம் தயாளு, நீ எல்லாத்தையும் பாத்துகிட்டே நான் இல்லாம!" என்றார் நா தழுதழுக்க."வீட்டுக்கு போலாம் வாங்க" என்று தயாளு அவர் கையை பிடித்து வெளியே கூடி வந்தார். அவர் முன்பே சொல்லி இருந்த வாடகை கார் நின்று கொண்டிருந்தது, இருவரும் உள்ளே அமர்ந்து கொள்ள, சமீர் உள்ளே இருந்து ஓடி வருவது தெரிந்தது. 

கிளப்பிய வண்டியை நிறுத்த கூறிவிட்டு கீழ் இறங்கினார் தயாளு, சமீர் பதட்டத்துடன் வந்து நின்றார். "பிரஜாபதி தப்பிச்சுட்டான் பா," என்று சமீர் சொன்னவுடன் வேகமாய் காரின் உள் ஏறியவர், "எங்க வீட்டுக்கு பாதுகாப்புக்கு ஆள் அனுப்பு," என்று விட்டு, உள்ளேய ஓட்டுனரிடம் "வேகமா போ ப தம்பி" என்றார். "என்னாச்சு தயாளு, " என்று சிவராம் கேட்டக,"பிரஜாபதி தப்பிச்சுட்டான்" என்றார். இதை கேட்டதும் சிவராமின் முகம் மாறியது. 

இருவரும் ஏதும் பேசி கொள்ளவில்லை. வீட்டிற்கு செல்லும் பாதை மிகவும் நீண்டது. 

மாலை ஆனாலும், வேலையிடத்தில் அழைத்த காரணத்தால் ஐவர் அணி கிளம்பிவிட தனியாக இரவு உணவை தயாரித்து கொண்டிருந்தாள் மயூரி. கீழே வீட்டை பூட்டி சாவியை எடுத்து வந்திருந்தாள். திகழன் நினைத்து கொண்டிருந்தவளுக்கு இன்று அவனை அணைத்து கொண்டது, அவன் கை வளைவில் நின்றது, அவனது வைட் ஷர்ட் அவள் தான் என்று தெரிந்து கொண்டது எல்லாம் அவள் இதழ் ஓரத்தில் ஒரு நிரந்தர புன்னகையை ஏற்றி வைத்தது. 

வாசலில் தயாளுஅம்மாள் குரல் கேட்டதும் கையில் சாவியுடன் வந்தாள். "அத்தை, வாங்க கீழ போலாம். ஆலம் கரைச்சு வெச்சுருக்கேன்" என்று முன் நடந்தாள். கீழே சிவராமனை கண்டதும், "மாமா" என கட்டி கொண்டாள். "எப்பிடி இருக்க டா தாரா" என்றார். "நல்ல இருக்கேன் மாமா, ஒரு 2 நிமிஷம் நில்லுங்க," என்று விட்டு உள்ளே சென்றவள் கையில் ஆலத்துடன் வந்தாள். 

நடனமாடும் புதிர்Where stories live. Discover now