அத்தை.... மருமகள்....

40 4 5
                                    

கையில் இருந்த ரிப்போர்ட்களை வைத்து தன்னால் இயன்றதை செய்து கொண்டிருந்தாள். 2 இரவுகள் கடந்தது, அவள் செய்து கொண்டிருந்த வேலை பலனளித்தது. மேலும் பரவாமல் இருக்க ஒரு குறிப்பிட்ட மருந்தை தயார் செய்தாள். சோதனை செய்து பார்த்தாள். ஹீமோகுளோபின் தாக்கப்படுவது குறைந்தது, ஆனால்  ஒரு 12 மணி நேரம் கழித்து மீண்டும் அதன் வீரியம் கூடியது, பாதிக்க பட்ட அனைவர்க்கும் 12 மணி நேரத்திற்கு ஒரு முறை அந்த மருந்தை செலுத்த பரிந்துரைத்தாள்.

சாவின் விளிம்பில் இருந்து காப்பாற்றினாலும், சாவின் பிடியில் இருந்து அவர்கள் மீட்க படாதது போல உணர்ந்தாள். முத்து விடம் பேசினால் தெளிவு வரும் என அவனை அழைத்தாள். அவளது அழைப்பு ஏற்கப்படவில்லை. கீழ் இறங்கி அவன் வேலை செய்யும் தளத்திற்கு வந்தாள். அவன் அறையை திறந்தாள். அவன் கையில் காபி கோப்பையுடன் நின்றிருந்தான்.கதவை சாற்றி விட்டு உள்ளே வந்தவள், முகத்தில் கவலை ரேகைகைகள் படர்ந்து நின்ற அவனை கண்டாள். மெதுவாக அவன் அருகில் வந்து நின்றாள். அவளை பார்த்ததும் வரவழைத்த புன்னகையை வீசினான். "என்னாச்சுங்க?" என்றாள், அவன் கோப்பையை வாங்கி கொண்டு. "வேற காபி போட் டு தரேன், அது ஆறிடுச்சு." என்றவனை அழகாக முறைத்தாள். "எனக்கு இது போதும், நீங்க சொல்லுங்க என்ன ஆச்சு.?". அவன் மேஜை மேல் இருந்த ஐவர் கூடி நின்று எடுத்த புகைப்படத்தை காட்டி "இந்த பசங்கள மிஸ் பண்றேன், அவனுங்க ரெண்டு பேரும் இருந்தா எந்த பிரச்னையும் பெருசா தெரியாது, இப்போ 3 பேர் யார் யார் னு தெரிஞ்சும், அவங்க சென்னை ல எங்க வந்து போனாங்க னு கண்டுபிடிக்க முடியல, சென்னை பஸ் தான் ஏறிருக்காங்க ஆனா, சென்னைக்குள்ள வரல. ஒன்னும் புரியல. அவனுங்க இருந்தா என்னால எல்லாத்தையும் சமாளிக்க முடியும், இப்போ என்னால முடியல" என்றான். 

கோப்பையை கீழே வைத்து விட்டு, அவன் கைகளை ஏந்தி கொண்டாள்." டேய், வேலா!" என்றாள். அவளை ஆச்சர்யமாக பார்த்தான். அவர்கள் காதலிக்க தொடங்கியதில் இருந்து அவனை மரியாதையுடன் அழைக்கிறாள். இன்று பழயபடி அவர்கள் நட்புடன் இருந்த நாட்களில் அழைப்பது போல அழைக்க சற்று குளிர்ந்தான். "நாம 5 பெரும் சேர்ந்து இருந்தா பலம் தான், ஆனா நாமெல்லாம் தனியா இருந்தாலும் நாம பலமா தான் இருப்போம், ஏன் தெரியுமா?" என்று நிறுத்தினாள். அவளை பதில் கூற சொல்லி தூண்டியது அவன் பார்வை. அவள் கைகளை எடுத்து அவன் நெஞ்சில் வைத்தவள், அவனை நெருங்கி நின்று பேசினாள், "நாம தனியா இருந்தாலும், நம்ம எல்லார் சிந்தனையும் இங்க இதயத்துல ஒண்ணா தான் இருக்கு." என்றவளை இறுக்கி அணைத்து கொண்டான். அவள் காதலி தான், ஆனால் அவளை விட சிறந்த தோழியும் யாரும் இல்லை. 

நடனமாடும் புதிர்Where stories live. Discover now